தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அக்ஷ்ய் குமாருக்கு தன்னுடைய க்ளவுஸை பரிசளித்த தோனி!

Go down

அக்ஷ்ய் குமாருக்கு தன்னுடைய க்ளவுஸை பரிசளித்த தோனி! Empty அக்ஷ்ய் குமாருக்கு தன்னுடைய க்ளவுஸை பரிசளித்த தோனி!

Post  ishwarya Fri Apr 05, 2013 1:09 pm

பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமாருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்
மகேந்திர சிங் ‌தோனி, தன்னுடைய கிரிக்கெட் க்ளவுஸை பரிசளித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷ்ய் குமார். இவர் தீவிர
கிரிக்கெட் வெறியர். அதுமட்டும் அல்லாது தோனியின் ரசிகரும் கூட. ஆனால் ஒரு
முறைகூட தோனியை சந்தித்தது இல்லை அக்ஷ்ய். இந்நிலையில் வங்கதேசத்தில்
நடந்து வரும் ஆசிய கிரிக்கெட் போட்டியுடன், தன்னுடைய வர இருக்கும் படத்தின்
புரோமஷனல் வேலைக்காக வங்கதேசம் சென்றிருந்தார் அக்ஷ்ய். கடந்த 18ம் தேதி
ஞாயிற்றுகிழமை இந்தியா-பாகிஸ்தான் போட்டியை அக்ஷ்ய் குமாரும் ரசித்தார்.
போட்டியின் முடிவில் விராட் ஹோக்லிக்கு ஆட்டநாயகன் விருது பரிசளித்தார்
அக்ஷ்ய்.
அப்போது தோனியை சந்திக்கும் வாய்ப்பு அக்ஷ்ய்க்கு கிடைத்தது. அப்போது
தோனியுடன் பேசிய அக்ஷ்ய், ரொம்ப கஷ்டமான ‌சேஷிங், அதை இந்திய வீரர்கள்
அருமையாக விளையாடி வெற்றி பெற்று இருக்கிறார்கள். நான் உங்களின் தீவிர
ரசிகன் என்றார். அதன்பிறகு அன்று இரவே அக்ஷ்ய் குமார் தங்கியிருந்த ஹோட்டல்
அறைக்கு தன்னுடைய கிரிக்கெட் க்ளவுஸை பரிசளித்து கூடவே நன்றி ஒரு
கடிதத்தையும் அனுப்பி இருக்கிறார் தோனி. தோனியின் இந்த பரிசை பார்த்து
பிரமித்து போன அக்ஷ்ய், உடனே தோனிக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

முன்னதாக ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்த போது,
கேப்டன் தோனிக்கு நெருக்கடி உருவானது. பலரும் அவரை வசைபாடினார்கள். ஆனால்
அப்போதும் கூட அக்ஷ்ய், தனது ட்விட்டர் வலை பக்கத்தில், கவலைப்படாதீர்கள்
தோனி, வாழ்க்கையில் சறுக்கல் என்பது நடக்கத்தான் செய்யும். அதற்காக
கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியிருந்தார். அதன்
வெளிப்படாகத்தான் தோனி தன்னுடைய கிரிக்கெட் க்ளவுஸை அவருக்கு பரிசளித்து
இருப்பதாக கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum