காசநோயை எளிதில் கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிப்பு!
Page 1 of 1

உயிர்க் கொல்லி நோயாக கருதப்படும் காசநோயை கண்டறிய இப்போது பல சோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. சளி பரிசோதனை, ஒவ்வாமை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து சிகிச்சை தரப்படுகிறது. இந்த ரிசோதனைகளை செய்து கொள்ள பல நோயாளிகள் தவறி விடுகின்றனர். இதனால் காச நோயாளிகள் அனைவரும் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.
இந்நிலையை தவிர்க்க டெல்லியை சேர்ந்த ரஞ்சன் நந்தா உட்பட இந்திய விஞ்ஞானிகள் இணைந்து எலக்ட்ரானிக் நோஸ் என்ற கருவியை வடிவமைத்துள்ளனர். காசநோயை ஆரம்ப நிலையிலேயே எளிதாக கண்டறிய இந்த கருவி உதவும். இதை வாயில் வைத்து ஊதும்போது நுரையீரலில் காற்றில் இருந்து வெளியேறும் ஒரு டஜனுக்கு மேற்பட்ட ரசாயன காரணிகள் மூலம் காசநோய் கிருமிகள் இருக்கிறதா என உடனடியாக தெரிந்து விடும். இந்த கருவியால் ஆரம்ப நிலை காசநோயை கண்டறிந்து தடுப்பதன் மூலம் ஆண்டுக்கு 40,000 உயிர்களை காப்பாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி ரஞ்சன் நந்தா கூறுகையில்: “காசநோய் பரவி பல உயிர்களை பலி வாங்கும் பின்தங்கிய ஏழைகள் வசிப்பிடங்களில் இந்த கருவி எளிதாக கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம்” என்றார்.
இந்த ஆராய்ச்சிக்கு பில்கேட்சின் அறக்கட்டளை உட்பட பல அமைப்புகளிடம் 9.5 லட்சம் டாலர் நிதியுதவி பெற்றுள்ளனர். 2013ம் ஆண்டுக்குள் இந்த கருவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» காசநோயை எளிதில் கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிப்பு!
» ஆஸ்துமா நோயாளிகளுக்கு புதிய கருவி பணம்தான் கொஞ்சம் அதிகம்!
» முதுகுவலியை ஒழிக்கும் புதிய கண்டுபிடிப்பு
» கருத்தடைக்கு புதிய முறை கண்டுபிடிப்பு!
» இரண்டு புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum