தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு: அரசே முடிவு எடுக்கலாம்! நீதிபதிகள் கருத்து

Go down

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு: அரசே முடிவு எடுக்கலாம்! நீதிபதிகள் கருத்து Empty மருத்துவ பொது நுழைவுத்தேர்வு: அரசே முடிவு எடுக்கலாம்! நீதிபதிகள் கருத்து

Post  amma Fri Apr 05, 2013 12:30 pm

மருத்துவ படிப்பு பொது நுழைவுத்தேர்வை ஓராண்டு தள்ளி வைக்க கோரிய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மனுவைத் திரும்பப் பெறுமாறு கடுமையாக கூறியது.

எம்.பி.பி.எஸ். மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் திட்டமிட்டது. இதற்கு தமிழ்நாடு உள் ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் தன.

இருப்பினும், அதை யும் மீறி, வரும் கல்வி ஆண்டில் (2012-2013) இருந்து மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய சுகாதா ரத்துறை அமைச்சகத் துக்கும், இந்திய மருத் துவ கவுன்சிலுக்கும் அனுமதி வழங்கி கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித் தது. இந்நிலையில், மருத் துவ பொது நுழைவுத் தேர்வை ஓராண்டுக்கு தள்ளி வைப்பதற்கு, அதாவது, 2013-2014 ஆம் கல்வி ஆண்டுக்கு தள்ளி வைப்பதற்கு அனுமதி கோரி, மத்திய சுகாதா ரத்துறை அமைச்சகம் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறப் பட்டு இருப்பதாவது:-

மராட்டியம், குஜ ராத், கோவா, அசாம், கருநாடகா ஆகிய மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள், வரும் கல்வி ஆண்டிலேயே மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கு மாறுவதை விரும்ப வில்லை. இந்திய மருத் துவ கவுன்சில் வெளி யிட்ட பாடத்திட் டத்தை மாணவர்கள் படித்து பழகுவதற்கு வசதியாக, ஓராண்டு தள்ளி வைக்குமாறு கூறியுள்ளனர். ஆந் திராவோ, 2 ஆண்டுகள் தள்ளி வைக்குமாறு கூறி யுள்ளது. எனவே, அவசர அவசரமாக, வரும் கல்வி ஆண்டி லேயே பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்து வதற்கு பதிலாக, ஓராண்டு கழித்து அமல் படுத்த விரும்புகிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில், பொது நுழைவுத்தேர்வுக்கான ஏற்பாடுகளை கவனிக்க விரும்புகிறோம்.-இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

இம்மனு, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சி.கே .பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத் திய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரி வித்தனர். அவர்கள் கூறியதாவது:-

நீதிபதிகள் எரிச்சல்

வரும் கல்வி ஆண் டில் இருந்து பொது நுழைவுத் தேர்வு நடத்து வதற்கான விதிமுறை களை வகுத்து விட்டதாக நீங்கள் (மத் திய அரசு) கூறினீர் கள்.அதை கேட்டுத்தான், பொது நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தோம். இப்போது, ஓராண்டு தள்ளி வைக்கு மாறு கூறு கிறீர்கள். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை செய்து கொள்ளுங்கள்.

அதற்கு எதற்கு எங் களை சம்பந்தப்படுத்துகி றீர்கள்? எதற்காக நீதி மன்றத்திற்கு இதை கொண்டு வருகிறீர்கள். நீங்கள் பொது நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க எடுத்த முடிவில் நாங்கள் எங்களைச் சம்பந்தப்படுத் திக்கொள்ள மாட்டோம். ஒன்று, இந்த மனுவை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது நாங்கள் தள்ளுபடி செய்து விடுவோம். -இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து, மனுவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» மருத்துவ பொது நுழைவுத்தேர்வு: அரசே முடிவு எடுக்கலாம்! நீதிபதிகள் கருத்து
» சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் ஸ்ருதி, அக்ஷரா வாழ்வில் தலையிட மாட்டேன்: தாய் சரிகா
» தேர்தல் முடிவு பற்றிய கருத்து : குஷ்புவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!
» விளாவுக்கு எடுக்கலாம் விழா!
» விஸ்வரூபத்துக்கு தடைகோரி கிறிஸ்தவர் வழக்கு! தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum