நந்தா நந்திதா – திரை விமர்சனம்
Page 1 of 1
நந்தா நந்திதா – திரை விமர்சனம்
ரவுடியின் காதல் கதை…
ஆட்டோ டிரைவர் மகன் நந்தா. சிறு வயதில் தாயை இழந்து தந்தைக்கு இரண்டாம்
தாரமான சித்தி கொடுமையில் வளர்கிறான். பெரியவன் ஆனதும் ஒரு தகராறில்
வீட்டில் இருந்து பெற்றோரால் விரட்டப்படுகிறான்.
நண்பன் மூலம் வட்டி பணத்தை வசூல் செய்யும் வேலை கிடைக்கிறது. அதில்
இருந்து தாதா நாசரின் பரிச்சயம் ஏற்படுகிறது. தேர்தலில் நிற்கும்
சண்முகராஜனை தீர்த்துகட்ட நாசர் திட்டமிடுகிறார். அவரை கொன்றால் பெரும்
தொகை தருவதாக நந்தாவுக்கு ஆசை காட்டுகிறார். அதை ஏற்று சண்முகராஜனிடம்
வேலைக்கு சேர்ந்து வெட்டி வீழ்த்தி விட்டு தப்பி ஓடுகிறார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக சண்முகராஜன் பிழைத்து கொள்கிறார். நந்தாவை பழி
தீர்க்க சண்முகராஜன் வெறிகொண்டு அலைகிறார். நாசரும் கோபமாகிறார்.
இன்னொருபுரம் அழகான நந்திதா மேல் காதல் வயப்பட்டு அவர் நினைவால்
தவிக்கிறார். காதல் நிறைவேறியதா? ரவுடிகளிடம் இருந்து தப்பினாரா? என்பது
கிளைமாக்ஸ்…
ரவுடி கதை பின்னணியில் குடும்ப சென்டிமெண்ட், காதல், நண்பர்கள் என
தொகுத்து காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ராம்சிவா.
நந்தாவாக வரும் ஹேமச்சந்திரன் கேரக்டரில் பொருந்துகிறார். வீட்டில்
இருந்து துரத்தப்பட்டு பட்டினியால் சுடுகாட்டில் காக்கைக்கு வைத்த சாதத்தை
சாப்பிட எத்தணித்து அனுதாபம் அள்ளுகிறார். மேக்னாவை வாய் பேசாதவர் என தவறாக
கருதுவதும் பிறகு உண்மை தெரிந்து மோதலாகி காதல் மலர்வதும் சுவாரஸ்யம்.
சண்முகராஜனை கொல்ல நாசர் கையாளாக மாறியதும் விறுவிறுப்பு எகிறுகிறது.
சண்முகராஜனிடம் வேலைக்கு சேர்ந்து நைசாக ஆள் இல்லாத இடத்துக்கு அழைத்து
போய் வெட்டி சாய்ப்பது குலைநடுக்கும்.
நந்திதாவாக வரும் மேக்னாராஜ் பளிச்சிடுகிறார். தன் கண் எதிரிலேயே காதலன்
இன்னொருத்தனை வெட்டி சாய்ப்பது கண்டு பதறும்போது அழுத்தம். நாசர்,
சண்முகராஜ் வில்லத்தனத்தில் மிரட்டல். கிளைமாக்சில் அப்பாவி உயிர்கள்
வன்முறைக்கு பலியாவது கதையோட்டத்துக்கு பெரிய பின்னடைவு. முடிவை மாற்றி
யோசித்து இருக்கலாம்.
எமில் பின்னணி இசையும் ராபர்ட்சன் ஒளிப்பதிவும் ஒன்ற வைக்கின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நந்தா நந்திதா படத்தின் ஒன் லைன் ஸ்டோரி!
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» கந்தா – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» கந்தா – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum