தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

3 ஏன் இந்த குழப்ப வெறி.?!

Go down

3 ஏன் இந்த குழப்ப வெறி.?! Empty 3 ஏன் இந்த குழப்ப வெறி.?!

Post  ishwarya Fri Apr 05, 2013 11:51 am

3 படம் இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியிருக்கிறது! ஆனால், இந்த 3 படம்
இன்று 30/3/12 வெளிவருவதில் நேற்று வரை ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்து
வந்தனவாம்!
குழப்பங்கள் திரையரங்க உரிமையாளர்களாலோ வினியோகஸ்தர்களாலோ,
பைனான்ஸியர்களலாலோ அல்லவாம்! வழக்கமாக இது போன்ற குழப்பங்களோ சிக்கல்களோ
மேற்படி படத்திற்கு பைனான்ஸ் செய்திருக்கும் பைனான்ஸியர்களாலோ வாங்கி
வெளியிடும் தியேட்டர் அதிபர்கள், வினியோஸ்தர்களாலோ ஒரு படத்திற்கு வருவது
சகஜம்!
ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரை அப்படத்தின் நாயகர் தனுஷ்., இயக்குநர்
ஐஸ்வர்யா தனுஷ், தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா உள்ளிட்டவர்களிடையே தான்
குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா? எனும் தயக்கம்
வியாபித்திருந்திருக்கிறது காரணம்? கடைசி நேரத்தில் படத்தில் டபுள்மீனிங்
டயலாக்குகள் செக்ஸியான சீன்கள்…ஜாஸ்தி இருப்பதாக அவர்களது மனதிற்குப்பட.,
அதனால் நேற்று வரை எடிட்டிங், கட்டிங், வெட்டிங், ஒட்டிங் என 3 படம்
எடிட்டிங் ரூமிலேயும், லேபிலேயும் இரு்திருக்கிறது!
இதனால் நேற்று இரவு ஒன்பது மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில்
திட்டமிடப்பட்டிருந்த பிரிமியர் ஷோ கேன்சலாகி இன்று வெள்ளி இரவு 10.30
மணிக்கு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது! மேலும் அப்படத்தில் இடம்
பெறும் கொலவெறி..பாடலில் இருக்கும் பெப் படத்தில் மிஸ்ஸிங் என்பதும்
ஏற்கனவே கிளைமாக்ஸில் ஹீரோ தனுஷ் இறப்பது மாதிரி இருந்த காட்சிகள்
மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது என்கின்றனர் விவரமறிந்தவர்கள்! ஏன் இந்த
குழப்பவெறி?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum