கூலாகியது ராக்கியின் 'கொல வெறி'!
Page 1 of 1
கூலாகியது ராக்கியின் 'கொல வெறி'!
'கொல வெறி' பாட்டுக்கு நடனமாட தன்னை ஒப்பந்தம் செய்து ஏமாற்றிய தனுஷை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மன்னித்துவிட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ராக்கி சாவந்த். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தில் அவரது கணவர் தனுஷ் பாடிய 'கொல வெறி' பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் கொல வெறி பாடலுக்கு தனுஷுடன் ஆட இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ராக்கி சாவந்த், மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனுஷை கடுமையாகச் சாடினார். அப்போது அவர், "கொல வெறி பாடலுக்கு நடனம் ஆட மிகவும் ஆர்வமாக இருந்தேன். அந்த பாடலுக்கு நடனம் ஆட என்னை ஒப்பந்தம் செய்து விட்டு கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. என்னை நம்ப வைத்து மோசம் செய்து விட்டார் தனுஷ்" என்று தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். ஆனால் இப்போது கூலாகிவிட்டார் ராக்கி. நேற்று நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'கொலவெறி' பாடலுக்கு நான் தனுஷுடன் சேர்ந்து நடனம் ஆடி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு அந்த வாய்ப்பு பறிபோனதால் அவரை திட்டினேன். இப்போது மன்னித்து விட்டேன். ரஜினி சாரை நான் மிகவும் மதிக்கிறேன். அவருக்காக தனுஷை விட்டுவிடுகிறேன். அந்தப் பாட்டும் எனக்குப் பிடித்திருந்தது. நான் திரையுலகிற்கு வந்த போது எனக்கு வழிகாட்டி என்று யாரும் கிடையாது. எனக்கு நானே வழிகாட்டி. தனுஷ் இந்தியில் நடிக்க வருகிறார். அவருக்கு வாழ்த்துகள்," என்றார். அடடா... ஒரு கவர்ச்சி ஸ்டண்ட் மிஸ்ஸாகிப்போச்சே.......
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 3 ஏன் இந்த குழப்ப வெறி.?!
» கொலை வெறி மவுசு
» சமூக வலை தளங்களில் கொடிகட்டிப்பறக்கும் கொலை வெறி!
» ‘Why this கொல வெறி’ பிடித்தாடும் குழந்தையின் காணொளியை பாருங்களேன்!
» ஒய் திஸ் கொலை வெறி… போல தெண்டுல்கருக்காக தனுஷ் புதிய பாடல்
» கொலை வெறி மவுசு
» சமூக வலை தளங்களில் கொடிகட்டிப்பறக்கும் கொலை வெறி!
» ‘Why this கொல வெறி’ பிடித்தாடும் குழந்தையின் காணொளியை பாருங்களேன்!
» ஒய் திஸ் கொலை வெறி… போல தெண்டுல்கருக்காக தனுஷ் புதிய பாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum