தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூரியநகரம் – திரை விமர்சனம்

Go down

சூரியநகரம் – திரை விமர்சனம் Empty சூரியநகரம் – திரை விமர்சனம்

Post  ishwarya Fri Apr 05, 2013 11:49 am

சூரியநகரம் – திரை விமர்சனம் F59c9b30-4a40-448d-b3c7-82952a81ae10_S_secvpf.gifதன்
சகோதரியின் உண்மை காதலை அழிக்க நினைக்கும் ஜாதி வெறியர்களிடமிருந்து
சகோதரியின் காதலை வாழவைக்க துடிக்கும் தம்பியை மையமாகக் கொண்டு
வெளிவந்துள்ள படம்.

பஸ்ஸில் பயணம் செய்யும் பயணியின் பிளாஷ் பேக்கிலிருந்து படம் துவங்குகிறது.

ஜாதிக்கூட்டத்துக்கு தலைவராக ஆர்.வி.உதயகுமார். ஜாதிக்காக வாழும்
இவருக்கு மகளாக வருகிறார் கதாயாயகி தமிழ்ச்செல்வி. இவருக்கு ஒரு தம்பி
இருக்கிறார். இருவர் மீதும் உதயகுமார் மிகுந்த பாசம் வைத்துள்ளார்.

இவர்களது வீட்டுக்கு எதிரில் மெக்கானிக் ஷாப் நடத்துபவர் கஞ்சா கருப்பு.
இவரது கடையில் வேலை பார்க்கும் தொழிலாளியாக கதாநாயகன் வெற்றிவேல்.

வேறுசாதியைச் சேர்ந்த வெற்றிவேல் ஒருதலை பட்சமாக தமிழ்ச்செல்வியை
காதலிக்கிறார். ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுக்கும் தமிழ்ச்செல்வி, ஒரு
கட்டத்தில் அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார். இவர்களது காதலுக்கு நாயகியின்
தம்பியும் உறுதுணையாக இருந்து, இவர்களுடன் சுற்றி வருகிறான்.

இந்நிலையில் இவரது தந்தை அவரது அக்கா மகனுக்கு நாயகியை திருமணம் செய்து
வைக்க முடிவு செய்கிறார். திருமண வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில்,
நாயகனும் நாயகியும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள முயல்கின்றனர்.

அப்போது நாயகியின் தந்தை கண்ணில் அவர்கள் பட்டுவிட, தந்தையின்
உதவியாளர்கள் நாயகனை அடித்துக் கொல்லப் பார்க்கிறார்கள். அப்போது நாயகனை
ஏதாவது செய்தால் நானும் இறந்துவிடுவேன் என்று தனது கழுத்தில் கத்தியை
வைத்தபடி நாயகி மிரட்டுகிறார். இதனால் நாயகனை விட்டுவிட்டு
சென்றுவிடுகிறார்கள்.

உதயகுமார் திட்டமிட்டபடி அவரது அக்கா மகனுக்கும் நாயகிக்கு திருமணம்
ஏற்பாடுகள் நடைபெறுகிறது. திருமணத்தின் போது அங்கே வரும் நாயகன்
மாப்பிள்ளையை வெட்டிக் கொல்கிறார். அதே சமயத்தில் தனது காதல் நிறைவேறாததால்
நாயகியும் விஷம் குடித்து மயங்கிச் சரிகிறார். நாயகனை போலீஸ் பிடித்து
சென்றுவிட, நாயகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

நாயகன் சிறையில் இருக்கும்போது, உதயகுமாரை அவரது எதிரிகள் பழி
தீர்க்கின்றனர். உதயகுமாரின் மறைவுக்குப் பிறகு ஜாதித் தலைவர் பதவியை
அவருடைய மகனுக்குப் பெற்றுத்தர, உதயகுமாரின் உதவியாளர் மாயன் முயற்சி
செய்கிறார்.

ஜாதிக்காக வாழும் மாயன் கதாநாயகியின் தம்பியை எப்படியாவது ஜாதித் தலைவராக ஆக்கி விடவேண்டும் என்று அவரை வளர்த்து பெரியவனாக்குகிறார்.

தனது அக்காவின் காதல் மீது அதிக பற்று கொண்ட தம்பி, வளர்ந்த பிறகு
அக்காவின் காதலை சேர்த்து வைக்கிறானா? அல்லது அவனது ஜாதிக்கு தலைவன்
பொறுப்பை ஏற்றானா? என்பது மீதிக்கதை.

காதல் ஜாதியை வென்றதா? என்பதை சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர்
செல்லமுத்து. இதில் இடைவேளை வரை கதாநாயகன் ராகுல் ரவீந்திரன் மற்றும்
ஆர்.வி.உதயகுமார் தலைமையில் செல்லும் கதை, இடைவேளைக்குப் பிறகு நாயகியின்
தம்பி பக்கம் சாய்கிறது.

நாயகியின் தந்தையாகவும், ஜாதி வெறியராகவும் உலாவரும் ஆர்.வி.உதயகுமார்
அப்பாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். வெற்றிவேலாக வரும் நாயகன் ராகுல்
ரவீந்திரன், தமிழ்ச்செல்வியாக வரும் மீரா இருவரும் தங்களது கதாபாத்திரத்தை
உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

நாயகியின் தம்பி கதாபாத்திரத்தில் வரும் உதயாவிற்கு படத்தில் மிகப்பெரிய
பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தில் காமெடிக்கு கஞ்சா கருப்பு, சூரி பொறுப்பேற்று, சிறப்பாக
செய்துள்ளனர்.

ஃபென் வியாலி இசையில் வைரமுத்துவின் வரிகளை உயரத்தில் நிறுத்த முயற்சி
செய்துள்ளார். வெங்கியின் ஒளிப்பதிவில் தேனி, கம்பம் பகுதியின் மலைப்
பகுதிகளும், அதைச் சுற்றிய வயல்வெளிகளும் கண்களுக்கு விருந்து.

ஜாதி, காதல் என்று நிறைய படங்கள் வெளிவந்தாலும், வழக்கமான கதையையே
இப்படத்திலும் இயக்குனர் வெளிப்படுத்த முயற்சித்திருப்பது நமக்கு சலிப்பை
உண்டாக்குகிறது. எதிர்பாராத கிளைமாக்ஸ் படத்திற்கு வலு சேர்க்கிறது.

இருப்பினும் கதையும், காட்சிகளும், கதை பாத்திரங்களும் மனதில் பதியவில்லை. பதியாமல் போனது படத்தின் பலவீனம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum