ஈழன் இளங்கோ இயக்கத்தில் முதல் ஆஸ்திரேலிய தமிழ்படம்!
Page 1 of 1

முதன்முறையாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் நடித்து, தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “இனியவளே காத்திருப்பேன்”. ஒரு மணி நேரம் 15 நிமிடம் ஓடும் முழுமையான இத்திரைப்படத்தை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். சென்னை மாநிலக்கல்லூரியில் புள்ளியல் பட்டப்படிப்பு படித்தவரும், நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் மல்டி மீடியா பட்டப்படிப்பு முடித்தவருமான ஈழன் இளங்கோ கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பும் செய்து, இயக்கி வெளிவர இருக்கும் இப்படத்தில் ஈழன் இளங்கோ முக்கிய பாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.
கருத்து வேறுபாடுகளில் கணவனை பிரிந்திருக்கும் பேத்தியை கணவனோடு சேர்த்து வைக்கும் தாத்தா! இதுதான் “இனியவளே காத்திருப்பேன்” படத்தின் கதைச்சுருக்கம். இந்த கதையின் கதை நாயகனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த தினேஷூம், கதைநாயகியாக நிலோஷாவும் நடித்திருக்கின்றனர். தயா நகைச்சுவை பாத்திரத்தில் வருகிறார். வெளிநாட்டில் எடுக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களில் பிரதானமாக இடம் பெறும் அம்சங்களான கத்தி, துப்பாக்கி, ரத்தம், இத்யாதி, இத்யாதி சமாச்சாரங்கள் இல்லாமல் முதல்முறையாக ஒரு அழகான குடும்ப சித்திரமாக உருவாகி இருக்கிறதாம் “இனியவளே காத்திருப்பேன்” திரைப்படம்!
படத்தில் இடம்பெறும் அந்த தாத்தா பாத்திரத்தில் முதுபெரும் ஈழத்து நடிகர் ரகுநாதன் நடித்திருக்கிறார். இவர் தான் அன்றைய சிலோனின் முதல் தமிழ் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அம்மா படைப்பகம் எனும் ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் உதயனும், பாடல்கள் இசையை கவியும் இசைக்க ஈழன் இளங்கோவின் ஒட்டு மொத்த உழைப்பில் மே அல்லது ஜூன் மாதம் உலகம் முழுக்க திரைக்கு வர இருக்கிறது.
இனியவளே காத்திருப்பேன் முதல் ஆஸ்திரேலிய தமிழ்படம்! ஆல் தி பெஸ்ட் படமாக வாழ்த்துவோம்!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்த தமிழ்படம்!
» அஜித் வேண்டுகோளை ஏற்று தலைப்பை மாற்றினார் தமிழ்படம் இயக்குனர்!
» அஜித்-விஜய் இருவருக்கும் தலைவலி கொடுக்கும் தமிழ்படம் இயக்குனர்!
» ஆஸ்திரேலிய பேய்களும் அழகி ஜெனிலியாவும்
» ஆஸ்திரேலிய செனட்டருக்கு மலேசியா அனுமதி மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum