தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மழலை வரம் அருளும் முப்பாத்தம்மன்காற்று சுழற்றியடித்தது. காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத முருங்கை, பூவரசு மரக்கிளைகள் மட மடவென முறிந்து விழுந்தன. இத்த னைக்கும் மத்தியில் அருள் வந்து தலை விரித்து ஆடும் பெண் போன்று அந்த வேப்ப மரம் காற்றில் மிக வேகமா

Go down

மழலை வரம் அருளும் முப்பாத்தம்மன்காற்று சுழற்றியடித்தது. காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத முருங்கை, பூவரசு மரக்கிளைகள் மட மடவென முறிந்து விழுந்தன. இத்த னைக்கும் மத்தியில் அருள் வந்து தலை விரித்து ஆடும் பெண் போன்று அந்த வேப்ப மரம் காற்றில் மிக வேகமா Empty மழலை வரம் அருளும் முப்பாத்தம்மன்காற்று சுழற்றியடித்தது. காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத முருங்கை, பூவரசு மரக்கிளைகள் மட மடவென முறிந்து விழுந்தன. இத்த னைக்கும் மத்தியில் அருள் வந்து தலை விரித்து ஆடும் பெண் போன்று அந்த வேப்ப மரம் காற்றில் மிக வேகமா

Post  amma Fri Jan 11, 2013 1:55 pm

காற்று சுழற்றியடித்தது. காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத
முருங்கை, பூவரசு மரக்கிளைகள் மட மடவென முறிந்து விழுந்தன. இத்த னைக்கும்
மத்தியில் அருள் வந்து தலை விரித்து ஆடும் பெண் போன்று அந்த வேப்ப மரம்
காற்றில் மிக வேகமாக ஆடியது. மரக் கிளைகளின் ஆட் டம் காளியின் ஆனந்த
தாண்டவமாய் தோன்றியது. வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த காய்ந்த இலைகள்
மரத்தின் கீழே, தாமரை மொட்டுபோல மலர்ந் திருந்த பாம்பு புற்றின் மீது
விழுந்தது. அந்தக் காட்சி, வேப்ப மரமே நாக பூஜை செய்வது போன்றிருந்தது.
வேப்ப மரத்திற்கு அருகே ஒரு அரச மரம். அந்த மூன்றுக்கும் மத்தியில் அழகாய்
அமர்ந்திருந்தாள் முப்பாத்தம்மன். அம்மனுக்கு நேரே ஒரு சிம்மம். அதற்கும்
முன்பாக ஒரு சூலம். முப்பாத்தம்மன் இங்கே எப்போது வந்தமர்ந்தாள்?

யாருக்கும்
தெரியாது. ஆனால், இவள் இப்பகுதி மக்களின் வாழ்வில் நீக்கமற
நிறைந்திருக்கிறாள். வெட்ட வெளியில் வீற்றிருக்கும் இந்த அன்னை, இப்பகுதி
மக்களின் காவல் தெய்வம். அன்னை குடிகொண்டுள்ள இந்தப்பகுதி பச்சை பசேலென
இருந்தது. காய்த்து தொங்கும் கொய்யாப் பழங்கள் சுமை தாங்காது தரை தட்டி
நின்றன. வரப்புகளின் இரு பக்கங்களிலும் வாழை மரங்கள் குலை தள்ளி பழுக்கத்
தயாராக இருந்தன. வயல்களில் ஒரு பக்கம் கம்பும், கேழ்வரகும், மற்றொரு
பக்கம் நெல்லும் விளைந்து கிடந்தன. மாமரங்களும், தென்னையும் எண்ணில்
அடங்காது. போதாததற்கு பூந்தோட்டம். பாத்திகட்டி விதைக்கப்பட்ட கீரை
தளதளவென வளர்ந்து இருந்தது.

இத்தனை செழிப்புக்கும் இவள்தான் காரணம்
என்று அப்பகுதி மக்கள் உறுதியாக நம்பினார்கள். முப்பாத்தம்மனிடம்
இவர்களுக்கு சின்ன பயமும் அதே சமயம் அதிக மரியாதையும் இருந்தன. அன்னையை
வீட்டிலிருக்கும் ஒரு மூத்த பெண்ணாகவே கருதினார்கள். நல்லது, கெட்டதைத்
தவறாமல் இவளோடு பகிர்ந்து கொண்டார்கள். வேண்டியதை செல்லமாய் வாங்கித்
தரும் தாய், தப்பு செய்தால் முதுகில் ஒரு அடிபோட்டு, காதைத் திருகி, தவறை
திருத்தி சரி செய்வாள் அல்லவா? அது போன்று, தப்பு செய்தால் அன்னை
தண்டிக்கவும் தயங்கமாட்டாள். அதில் குழந்தை திருந்த வேண் டுமே என்ற
பரிவுதான் இருக்கும்; தண்டிக்கும் அதிகார குணம் இருக்காது.

அதே
போன்று ‘இத விதைக்க போறேன். நல்லா விளையுமா? இந்தப் பெண்ணை என் பையனுக்கு
முடிக்கலாம்னு இருக்கேன், முடிக்கலாமா’ என்று அவளிடம் பூப்போட்டு
கேட்டுதான் எதையும் முடிவு செய்வார்கள். அறுவடை முடிந்ததும் முதல் படையல்
முப்பாத்தம்மனுக்குத்தான். தாலிக்கட்டி வீட் டுக்கு அழைத்து வருவதற்கு
முன்பு முப்பாத்தம்மனிடம் ஆசி பெற்ற பின்புதான் மணமகளை வீட்டிற்கு அழைத்து
வருவார்கள். இப்படி அந்நாளைய வயல்வெளிக்கு நடுவே ஒய்யாரமாய் அமர்ந்து
அருள்புரியும் அன்னை இருப்பது சென்னை- தியாகராய நகரில்! பனகல் பார்க்
பின்புறம், ராமகிருஷ்ணா மிஷன் அருகில், மகாராஜபுரம் சந்தானம் சாலையில்
இருக்கிறது முப்பாத்தம்மன் ஆலயம்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு
மாம்பலம் மிகச் சிறிய கிராமம். கந்தப்பன் சாவடி, தேனாம்பேட்டை,
கோடம்பாக்கம் எல்லாம் அதையொட்டி இருந்த கிராமங்கள். அப்போதெல்லாம் இந்தப்
பகுதிகளில் தார் சாலையை பார்ப்பது அரிது. மண் ரோடுதான். அது மட்டுமல்லாது
இந்த கிராமங்களில் இ ருந்த வீடுகளை விரல் விட்டு எண்ணி விட முடியும்.
விவசாயம்தான் பிரதானம். ஆனால், இன்று? கான்க்ரீட் காடுகளாய் மாறிய
நகரத்தில் பழைய விவசாய நிலங்களை கற்பனை கூட செய்ய முடியவில்லை. ஆனால்,
அன்னை முப்பாத்தம்மன் அன்று எப்படி தாயன்போடு மக்களை காத்தாளோ அதே போன்று,
இன்றும் தன்னை நாடி வந்தவர்களின் துயரெல்லாம் துடைத்து அருள்கிறாள்.

கோயில்
உள்ளே அன்னை அருள் காட்சி நல்குகிறாள். அன்னை மிக அழகாய், கம்பீரமாய்
கருவறையில் அமர்ந்திருக்கிறாள். அன்று வெட்டவெளியில் இருந்த அன்னைக்கு ஒரு
தலைமுறை கீற்றுக் கொட்டகை அமைத்து அழகு பார்த்தது. அடுத்த தலைமுறை
அன்னைக்காக ஓட்டுக் கொட்டகைப் போட்டது. இன்று ஐந்தாவது தலைமுறையாக அன்னையை
வணங்கும் மக்கள், அன்னையின் கருவறையை சுற்றி பலமான மதில் சுவரெழுப்பி,
மண்டபம் அமைத்து, கருவறை மீது விமானம் உருவாக்கி கும்பாபிஷேகமும்
செய்துள்ளனர்.

தங்களது வாழ்வை வளமாக்கிய அன்னையை உயர்ந்த பீடத்தில்
அமர்த்தி இருக்கிறார்கள் மக்கள். அன்னையின் திருமேனியை மலர்ச்சரங்களும்
எலு மிச்சை மாலைகளும் அலங்கரிக்கின்றன. அந்த அழகுக்கு அன்னையின் மெல்லிய
புன்னகை மேலும் அழகு சேர்க்கிறது. அன்னைக்கு நான்கு கரங் கள். மேலிரு
கரங்களில் உடுக்கையும் பாசமும் தாங்கியிருக்கிறாள். சூலமும் கபாலமும்
கீழிரு கரங்களை அலங்கரிக்கின்றன. பிரகாசமான அன்னை யின் சிரசைச் சுற்றி
ஒளிரும் தீ ஜுவாலை, அன்னை காவல் தெய்வம், கிராம தேவதை என்பதை சொல்லாமல்
சொல்கிறது.

ஆலய பிராகாரத்தில் நவகிரக சந்நதி இருக்கிறது. அருகில்
விநாயகர் சந்நதி. விநாயகர் சந்நதிக்கு அருகில் மிக பிரமாண்டமான புற்று
இருக்கிறது. புற்றைச் சுற்றி நாகர் சிலைகள். பக்தர்கள் இந்தப் புற்றுக்கு
பாலூற்றி, மஞ்சள் தூவி வழிபடுகிறார்கள். இதற்கு அருகில் அரசும், வேம்பும்
இருக்கின் றன. ஆலய வலம் வருகையில் மற்றொரு விநாயகரையும் காணலாம். முன்பு
ஒன்றாய் இருந்த இரண்டு விநாயகர்களை தனித்தனியாக அமர்த்தியுள் ளார்கள்.
அதற்கு அடுத்து வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், ஐயப்பன், அனுமன் ஆகியோர்
தனித்தனி சந்நதிகளில் அமர்ந்து தரிசனம் தருகி றார்கள். சனிக்கிழமைகளில்
அனுமன் சந்நதி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. வாயு குமாரனுக்கு
வெற்றிலை மாலை அணிவித்தும், வெண் ணெய் பூசியும் வணங்குகிறார்கள்.

அன்னையின்
ஆலயத்திற்கு தொடர்ந்து ஒன்பது வாரம் வந்து, எலுமிச்சம் பழத்தில் நெய்
விளக்கேற்றி வணங்கி வந்தால் திருமணத்தடை அகன்று, நல்ல இடத்தில் திருமணம்
நடக்கும்; அன்னைக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்தால்
முத்தான குழந்தை பிறக்கும்; நோய் தீரும் என்கிறார்கள் அன்னையால் வளமடைந்த
பக்தர்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி
வழியும் முப்பாத் தம்மன் ஆலயத்தில் மஞ்சள் மணமும், அன்னையின் அன்பு மயமான
தெய்வீக சக்தியும் நிரம்பித் ததும்புகின்றன. அன்னையின் அழகு முகம் காண,
சூரியனைக் கண்ட பனியாய் துயரமெல்லாம் மறைந்து, ஆனந்த ஒளி சூழ்கிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum