தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புவனேஸ்வரியின் வாழ்வே மாயம்!

Go down

புவனேஸ்வரியின் வாழ்வே மாயம்! Empty புவனேஸ்வரியின் வாழ்வே மாயம்!

Post  ishwarya Thu Apr 04, 2013 5:07 pm

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை புவனேஸ்வரி வாழ்வே மாயம் என்ற சின்னத்திரை தொடரில் வில்லியாக நடிக்கிறார். மெகா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் வாழ்வே மாயம். தொடரின் கதைப்படி, காதல் ஜோடிகள் சதீஷ்-ப்ரியா இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் பேர் அதிர்ச்சி. விபத்தொன்றில் சதீஷ் தனது ஞாபக சக்தியை இழக்கிறான்.

இந்த காதல் திருமணத்திற்கு முன்பே பாவனா என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தான் சதீஷ். அந்தக் காதல் நிறைவேறாத நிலையில் தான் அடுத்த காதல். இந்தக் காதல் கல்யாணத்தில் முடிய, சதீஷின் திருமதியானாள் ப்ரியா. நினைவாற்றலை சதீஷ் இழந்த பிறகு நிலைமை அப்படியே தலைகீழ். பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயத்தையே மறந்து விடுகிறான் சதீஷ். இந்த சூழலில் சதீஷின் பழைய காதலி பாவனா அவனை சந்திக்கிறாள். மீண்டும் தனது காதலை புதுப்பித்துக் கொள்கிறாள். சதீஷூம் பாவனாவின் அன்பில் உருகி அவளுடனே சென்று விடுகிறான். விஷயம் தெரிந்து அதிரும் ப்ரியா, தன் கணவனை பாவனாவிடம் இருந்து மீட்டெடுக்க போராடுகிறாள். அவளால் தன் கணவனை பழைய நினைவுகளுக்குள் கொண்டு வந்து இழந்து போன தன் வாழ்க்கையை மீட்டெடுக்க முடிந்ததா என்பது பிற்பகுதி கதை. பிரேம்சாய், அகிலா, பாவனா, லட்சுமிராஜ், பாலாஜி, ராஜ்குமார், ஷிவானி ஆகியோர் நடித்துள்ள இத்தொடருக்கு கண்மணிசுப்பு திரைக்கதை எழுதி இருக்கிறார். எஸ்.வி.சோலைராஜா இயக்குகிறார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum