தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிழக்கு கடற்கரை சாலைதான் எனக்கு சொர்க்கம்! த்ரிஷா

Go down

கிழக்கு கடற்கரை சாலைதான் எனக்கு சொர்க்கம்! த்ரிஷா Empty கிழக்கு கடற்கரை சாலைதான் எனக்கு சொர்க்கம்! த்ரிஷா

Post  ishwarya Thu Apr 04, 2013 4:25 pm

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலைதான் எனக்கு சொர்க்கமாக தெரிகிறது, என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழில் விஷால் ஜோடியாக சமரன் படத்தில் நடித்து வரும் த்ரிஷா, சமீப நாட்களாக சென்னையிலேயே தங்கியிருக்கிறார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், உலகிலேயே எனக்கு பிடித்த இடம் சென்னைதான். சென்னை எனது தாய் வீடு. இங்கு நான் விரும்பாத இடங்களே கிடையாது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை. அதில் பயணப்படும் போது சொர்க்கத்தில் இருப்பதுபோல் இருக்கும். அங்குதான் எனக்கு பிடித்தமான ரிசார்ட்கள் உள்ளன. அடிக்கடி அந்த சாலையில் பயணிப்பதை விரும்புவேன். அதேபோல எனக்கு தமிழ் ரசிகர்களை மிகப் பிடிக்கும். அவர்கள் தலையில் மோசமான எந்த விஷயத்தையும் திணிக்க முடியாது. நல்ல படங்களை மட்டுமே பார்க்கின்றனர். திறமையிருந்தால் புதுமுக நடிகர்களையும் ஊக்கப்படுத்துகின்றனர், என்று கூறியுள்ளார்.

பிடித்த நடிகர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்திருக்கும் த்ரிஷா, நான் வளரும்போது தமிழ் சினிமாவை அதிகம் தெரியாது. மாடலிங்கில் ஈடுபட்ட பிறகுதான் திரையுலகுக்கு நெருக்கமானேன். திரையுலகுக்கு வருவதற்கு முன்னால் சினிமாவில் எனக்கு தெரிந்த மூன்று பேர் ரஜினி, கமல், மணிரத்னம் மட்டும்தான். வீட்டிலும் அவர்களின் படங்களை பார்க்கத்தான் அனுமதிப்பார்கள். அதிலும் முதல் நாள் ரஜினி படங்களை பார்த்த அனுபவங்கள் மறக்க முடியாதவை, என்று கூறியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கிழக்கு கடற்கரை சாலையில் கார்கள் மோதல்: 4 பேர் சாவு
» சீனியராவது ஜூனியராவது..? எனக்கு பிரச்சினையே இல்ல..! - த்ரிஷா
» சினிமாவில் எனக்கு தெரிந்த மூன்று பேர் - த்ரிஷா
» வடக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று(25.03.2013) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரன்பிம' காணி உறுதிப்பத்திரங்
» இங்கேயும் ஒரு சொர்க்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum