தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாரா-திரிஷா இடையே திடீர் பனிப்போர்

Go down

நயன்தாரா-திரிஷா இடையே திடீர் பனிப்போர் Empty நயன்தாரா-திரிஷா இடையே திடீர் பனிப்போர்

Post  ishwarya Thu Apr 04, 2013 2:20 pm

நயன்தாரா-திரிஷா இடையே திடீர் பனிப்போர் Nayanthara-couldnt-control-her-weeping-350x346நடிகைகள்
நயன்தாரா-திரிஷா இடையே பனிப்போர் நடக்கிறது. இருவரும் தமிழ், தெலுங்கு
திரையுலகில் முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளனர். இளம் நாயகிகள்
வரத்து அதிகமாகி உள்ள நிலையிலும் மார்க்கெட்டில் வலுவாக நீடிக்கிறார்கள்.

நயன்தாரா ரூ.1 1/2 கோடியும் திரிஷா ரூ.1 கோடியே 20 லட்சமும் சம்பளம்
வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும்
நயன்தாரா அல்லது திரிஷா என்ற ரீதியில் இருவரையும் மனதில் வைத்து கதைகளை
உருவாக்கி வாய்ப்பு அளிக்கிறார்கள்.

இந்த வகையில் நயன்தாராவுக்கு வரவேண்டிய படங்கள் திரிஷாவுக்கும் அவருக்கு
போகவேண்டிய படங்கள் நயன்தாராவுக்கும் மாறி வந்துள்ளன. ஏற்கனவே ‘குருவி’
படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கடைசி
நேரத்தில் அவரை மாற்றி விட்டு திரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். இந்த
படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையை நயன்தாரா எரிச்சலோடு திருப்பி
கொடுத்தார்.

இதுபோல் ‘சத்யம்’ படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க திரிஷாவை முடிவு
செய்தனர். ஆனால் கடைசி நேரம் நயன்தாரா அப்படத்தை தட்டி பறித்துக் கொண்டார்.
அப்போது உருவான மோதல் இப்போதும் நீடிப்பதாக திரையுலகினர் கிசு
கிசுக்கின்றனர்.

ஒருவர் வாய்ப்பை மற்றவர் பிடுங்கிக் கொள்ளும் போக்கு தொடர்கிறது.
உதாரணமாக சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையொன்றில் சேலை விளம்பரத்துக்கு
நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே கடையில் திரிஷா விளம்பர தூதுவராக
உள்ளார்.

இருவருக்கும் இடையே யாருக்கு அதிக விளம்பர போர்டுகள் வைப்பது என்பதில்
மோதல் நடக்கிறதாம். சமீபத்தில் பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற
படமொன்றை தனது டுவிட்டரில் திரிஷா வெளியிட்டார். இந்த படம் பிறந்தநாள்
நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டதாம்.

பிரபுதேவா தனது முன்னாள் காதலர் என்பதால் இந்த படத்தை பார்த்து நயன்தாரா
கோபத்தில் உள்ளாராம். பதிலடியாக ஐதராபாத்தில் நடந்த விழா ஒன்றில்
திரிஷாவின் நெருங்கிய நண்பரான நடிகர் ராணா அருகில் நயன்தாரா
உட்கார்ந்திருப்பது போன்ற படங்கள் வெளியாகி திரிஷாவை ஆத்திர மூட்டியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மீடியாவிடம் நயன்தாரா திடீர் கோபம்
» ரசிகர்கள் ஆதரவு யாருக்கு?: நயன்தாரா, தமன்னாவை மிஞ்சிய திரிஷா
» நயன்தாரா, திரிஷா, தமன்னாவுக்கு சிறந்த நடிகைகளுக்கான ‘சந்தோஷம்’ விருது
» நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா, அனுஷ்கா இந்த ஆண்டின் “டாப் 5” நடிகைகள்
» கூடுதல் சம்பளம் கேட்டு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அஞ்சலி கெடுபிடி – தயாரிப்பாளர்கள் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum