தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா, அனுஷ்கா இந்த ஆண்டின் “டாப் 5” நடிகைகள்

Go down

நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா, அனுஷ்கா இந்த ஆண்டின் “டாப் 5” நடிகைகள் Empty நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா, அனுஷ்கா இந்த ஆண்டின் “டாப் 5” நடிகைகள்

Post  ishwarya Sat Apr 20, 2013 6:21 pm

தமிழ் திரையுலகில் புதுமுகங்கள் வரத்து அதிகம் உள்ளது. ஆனால் ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு வந்த வேகத்திலேயே காணாமல் போய் விடுகின்றனர்.

இதில் சில நடிகைகள் மட்டும் நிலைத்து நிற்கின்றனர். அவர்களில் நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா, அனுஷ்கா முக்கிய மானவர்கள். இவ்வாண் டின் “டாப் 5” நடிகைகள் பட்டியலில் இவர்களே இருக்கிறார்கள். அதிக சம்பளம் ரசிகர்கள் செல்வாக்கு, நடிப்புத் திறமை போன்றவற்றால் இந்த பட்டியலை அவர்கள் எட்டிப்பிடித்துள்ளனர்.

நயன்தாரா நடித்த “பாஸ் என்ற பாஸ்கரன்” படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. அவரிடம் வேறுபடங்கள் கைவசம் இல்லாவிட்டாலும் ரசிகர் மனதை ஆக்கிரமித்துள்ளார். அவர் தோற்றமும் கவர்வ தாக உள்ளது. பிரபுதேவாவுடனான காதல் சர்ச்சைகள் பின்னடைவை ஏற்படுத்தினாலும் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவ ராகவே உள்ளார்.

திரிஷாவுக்கு “விண்ணைத்தாண்டி வருவாயா” படம் இவ்வாண்டின் வெற்றிப் படமாக அமைந்தது. கமல் ஜோடியான “மன்மதன் அம்பு” படம் வருகிற 23-ந்தேதி ரிலீசாகிறது. அஜித்துடன் நடிக்கும் “மங்காத்தா” படமும் கைவசம் உள்ளது.

தமன்னாவுக்கு “தில்லா லங்கடி”, “சுறா”, படங்கள் சுமாராக ஓடின. ஆனால் “பையா” படம் பரபரப்பாக ஓடி முன்னணி நடிகையாக்கியது. சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டார். முன்னணி ஹீரோக்கள் தமன்னாவுடன் ஜோடி சேர ஆர்வம் காட்டுகின்றனர்.

கார்த்தி ஜோடியாக நடிக்கும் “சிறுத்தை” படம் ஜனவரியில் திரைக்கு வருகிறது. தனுஷ் ஜோடியாக நடிக்கும் “வேங்கை” படமும் புத்தாண்டில் ரிலீஸ் ஆகிறது. ஸ்ரேயா “ஜக்குபாய்”, “சிக்கு புக்கு” படங்களில் நடித்தார். தற்போது “ரவுத்திரம்” என்ற படங்களில் நடித்து வருகிறார். ரஜினியுடன் சிவாஜியில் ஜோடி சேர்ந்த இந்த அதிர்ஷ்ட நாயகிக்கு இந்த வருடம் பெரிதாக படங்கள் இல்லை. ஆனாலும் முன்னணி நடிகையாகவே இருக்கிறார்.

புது வரவான அனுஷ்கா தமிழ் திரையுலகில் ஏறுமுக மாக உள்ளார். தெலுங்கில் இருந்து டப்பிங் ஆன “அருந்ததி” மூலம் தமிழக மெங்கும் பிரபலமாகி இவ்வாண்டு சூர்யாவுடன் நடித்து ரிலீசான “சிங்கம்” படம் வெற்றிகரமாக ஓடி கவனத்தை ஈர்த்தார். தற்போது “வானம்”, “தெய்வ மகன்” என இரு படங்கள் கைவசம் உள்ளன.

இந்த “டாப் 5” நடிகைகள் தவிர புது வரவான ஓவியா, அமலா பால் இருவரும் வேகமாக வளர்கிறார்கள். ஓவியா “களவாணி”யில் அறிமுகமானார். கமலுடன் “மன்மதன் அம்பு” படத்தில் வருகிறார். அமலாபால் “சிந்து சமவெளி”, “மைனா” படங்கள் மூலம் பிரபல மானார். தற்போது விக்ரம் ஜோடியாக நடித்து வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» புது நடிகைகள் வரவால் “என் செல்வாக்கு குறையவில்லை” – திரிஷா
» அஜீத், சிம்பு, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா நடிகர், நடிகைகளின் புத்தாண்டு விருந்துகள்
» நடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி; தமன்னா ரூ.80 லட்சம், ஹன்சிகா ரூ.30 லட்சம்
» 2011-ல் கலக்கிய ‘டாப் 10′ நடிகைகள்
» கோடிகளில் புரளும் திரை நட்சத்திரங்கள்! ரஜினி-அனுஷ்கா டாப்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum