தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்தமாமா

Go down

   சந்தமாமா                          Empty சந்தமாமா

Post  ishwarya Thu Apr 04, 2013 2:16 pm

காமெடி நடிகரான கருணாஸ் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது
கதையின் நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்துக்கு சந்தமாமா என
பெயரிட்டுள்ளனர். நாயகியாக ஸ்வேதா பாசு மற்றும் இளவரசு, எம்.எஸ். பாஸ்கர்,
மோகன்ராம், மாறன், மயில்சாமி, கொட்டாச்சி, பருத்திவீரன், சுஜாதா ஆகியோரும்
நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் ராதாகிருஷ்ணன். இவர்
தம்பி கண்ணன் தானம், வினயன், வி.சி.வடிவுடையான் போன்றோரிடம் உதவியாளராக
பணியாற்றியவர். கிளாசிக் சினிமாஸ் சார்பில் முரளி தயாரிக்கிறார்.

சந்தானகிருஷ்ணன் என்ற சாதாரண ஒருவன் தனது எழுத்தாற்றலையும் கற்பனை
சக்தியையும் பயன்படுத்தி பெரிய எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆவலில்
சந்தமாமாவாகிறான். அதில் அவன் பெற்ற அனுபவங்களே கதை என்றார் இயக்குனர்.

நகைச்சுவையுடன் குடும்ப சென்டிமெண்டை கலந்து படத்தை உருவாக்கி
இருப்பதாகவும் அவர் சொன்னார். படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னையில்
தொடர்ந்து நடக்கிறது.

வசனம்: ராம்நாத், ஒளிப்பதிவு: ஆனந்தகுட்டன், இசை: ஸ்ரீகாந்த்தேவா,
பாடல்: வைரமுத்து, எடிட்டிங்: ஜி. முரளி, தயாரிப்பு நிர்வாகம்: ரகு, இணை
தயாரிப்பு: உன்னி கிருஷ்ணன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum