தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்தமாமா படத்துக்கு 260 பிரின்ட்

Go down

  சந்தமாமா படத்துக்கு 260 பிரின்ட்  Empty சந்தமாமா படத்துக்கு 260 பிரின்ட்

Post  ishwarya Tue Mar 12, 2013 1:01 pm

திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி படங்களை தொடர்ந்து கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘சந்தமாமா. இது பற்றி அவர் கூறியதாவது:
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கதாபாத்திரங்களில் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நடித்தேன். அதிலிருந்து வித்தியாசமாக காமெடி, சென்டிமென்ட் கலந்த அழுத்தமான கதையாக உருவாகி இருக்கிறது சந்தமாமா. சந்தானகிருஷ்ணன் என்ற சாதாரண ஒரு வாலிபன் சந்தமாமா என்ற பெரிய எழுத்தாளராக ஆகிறான். ஒரு முயற்சியில் உயர்வு கிடைக்கும்போது பாராட்டும் நண்பர்கள், அதே முயற்சி தோல்வியாகும்போது கிண்டல் செய்வார்கள். இப்படியொரு அனுபவம் எல்லார் வாழ்விலும் ஏற்பட்டிருக்கும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்பட்டிருக்கும் இந்த அனுபவம்தான் கதையின் கரு.

ஹரிஸ் கல்யாண் மற்றொரு ஹீரோ. கதாநாயகி சுவேதா பாசு. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். என்னுடன் நடித்தவர்களில் ‘திண்டுக்கல் சாரதி‘யில் நடித்த கார்த்திகா கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார். அவரை யும் மிஞ்சும் அளவுக்கு சுவேதா பாசு நடித்திருக்கிறார். மேலும் ரகசியா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கொட்டாச்சி, மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்கம் ராதாகிருஷ்ணன். பாடல்கள் வைரமுத்து. இசை ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு ஆனந்தகுட்டன். தயாரிப்பு முரளி. மார்ச் 1ம் தேதி ரிலீஸ். இதுவரை ஒரு காமெடி நடிகர் நடித்த படம் வெளியாகாத அளவுக்கு 260 பிரின்ட் வெளியிடப்படுகிறது. தவிர ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை போன்ற நாடுகளில் வெளியாகிறது. இவ்வாறு கருணாஸ் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum