வரும் 28ம் தேதி தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய தலைவர் தேர்வு!
Page 1 of 1

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தலைவர் பொறுப்புக்கு வந்து ஒரு ஆண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இதுநாள் வரை சங்க உறுப்பினர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர், எந்த நன்மையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சங்கத்தின் முக்கிய பிரச்னையாக இருக்கும் பெப்சி தொழிலாளர்களின் ஊதிய பிரச்னை தீர்க்கப்படவில்லை என்றும் சிறு படத் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தமிழக அரசின் மானியத் தொகையை பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது உள்ளன. இந்நிலையில் வரும் 28ம் தேதி கூடும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முக்தா சீனிவாசன் தலைமையிலான எதிர் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்தப் பொதுக்குழுவில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை தீர்மானிக்க போவதாகவும் கேயார், சேகர் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். இதனால் எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது.
முன்னதாக இது குறித்து முக்தா சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எஸ்.ஏ.சந்திரசேகர் மீது தனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது. ஆனால் அவர் ஒரு சங்கத்துக்கு தலைவராக எந்த தகுதியும் இல்லை என்றே நினைக்கிறேன் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்
» சினிமா இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய இணையதளம்- வெப் டிவி!
» தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன்
» சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு
» திமுக தோல்வி-தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், பெப்ஸி குகநாதன் ராஜினாமா!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum