தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷங்கர்-வடிவேலு-சிம்புதேவன் கூட்டணியில் இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி 2

Go down

ஷங்கர்-வடிவேலு-சிம்புதேவன் கூட்டணியில் இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி 2 Empty ஷங்கர்-வடிவேலு-சிம்புதேவன் கூட்டணியில் இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி 2

Post  ishwarya Thu Apr 04, 2013 2:01 pm

ஷங்கர்-வடிவேலு-சிம்புதேவன் கூட்டணியில் இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி 2 Img1120419011_1_1-350x180அரசியல்
பிரச்சனையில் அல்லாடிய வடிவேலுவை வைத்து படம் செய்ய அனைவரும் தயங்கிய
நிலையில் துணிச்சலாக மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக்குகிறார் இயக்குனர்
ஷங்கர். ஆம், இவரின் எஸ் பிக்சர்ஸ் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23 ஆம்
புலிக்கேசியின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறது.

இம்சை அரசனின் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இந்த இரண்டாம்
பாகத்தையும் இயக்குகிறார். படத்தின் கதை, ஸ்கிரிப்ட் என அனைத்தும் பக்காவாக
தயாராகியுள்ளது. இன்னும் சில தினங்களில் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ
அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 18 கோடிகள் என்பது
உபரி தகவல்.

அதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு நடத்திய பிரச்சாரம் அவருக்கு படங்கள்
இல்லாமல் செய்தது. அவரை வைத்து படம் செய்யக் கூடாது என்ற ரகசிய உத்தரவு
திரையுலகில் போடப்பட்டது. அதை மீறி அவரை ஒப்பந்தம் செய்ய யாருக்கும்
துணிச்சல் வரவில்லை. இந்நிலையில்தான் தயாரிப்பிலிருந்து தற்காலிகமாக
விலகிவிட்டேன் என்று தெரிவித்த ஷங்கர் வடிவேலுவை ஹீரோவாக்கியிருக்கிறார்.
அதுவும் அவர் ஏற்கனவே தயாரித்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில்.

இந்தப்படம் குறித்த செய்தி இன்னும் பலருக்கு தெரியாது. அதிகாரபூர்வ
அறிவிப்பு வரும்போது திரையுலகில் இது புயலைக் கிளப்ப வாய்ப்புள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வடிவேலு – சிம்புதேவன் சந்திப்பு: இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தயாராகிறது?
» இம்சை அரசன் 23-ம் புலிகேசி': சிம்பு-வடிவேலு சந்திப்பு!
» விரைவில், இம்சை அரசன் 23ம் புலிகேசியின் 2ம் பாகம்
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'.
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum