மலேசிய பாராளுமன்றம் கலைப்பு இந்த மாதம் பொதுத்தேர்தல்
Page 1 of 1
மலேசிய பாராளுமன்றம் கலைப்பு இந்த மாதம் பொதுத்தேர்தல்
மலேசிய பாராளுமன்றத்தை பிரதமர் நாஜிப் ரசாக் நேற்று கலைத்து விட்டார். இதையடுத்து இந்த மாத இறுதியில் (அனேகமாக 27–ந் தேதி) பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.59 வயதான நாஜிப் ரசாக்கின் தேசிய முன்னணி கூட்டணி கடந்த 2008–ம் ஆண்டு நடந்த தேர்தலில் 3–ல் 2 பங்கு மெஜாரிட்டியை முதன்முதலாக இழந்தது. இப்போது தேசிய முன்னணி கூட்டணிக்கு முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான 3 கட்சி கூட்டணி பெரும் சவாலாக அமைந்துள்ளது.இருப்பினும் பாராளுமன்ற தேர்தலில் தனது கூட்டணி அறுதிப்பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என நாஜிப் ரசாக் கூறினார். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் அணி வெற்றி பெற்றால், நாட்டில் சமூக, பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாமல் போய் விடும் என எச்சரித்துள்ளார்.மலேசியாவில், கடந்த 56 ஆண்டு கால ஆட்சியில், ஆளும் கூட்டணி எதிர்க்கட்சி அணியுடன் மிக கடுமையான சவாலை முதன் முதலாக சந்திக்கும் என அந்த நாட்டு அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலேசிய பாராளுமன்றம் கலைப்பு இந்த மாதம் பொதுத்தேர்தல்
» சரப்ஜித்சிங் மரணத்தால் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
» மலேசிய சாலை விபத்தில் 5 தமிழர்கள் பலி
» நமது பாராளுமன்றம் எவ்வாறு இயங்குகிறது?
» மலேசிய மண்ணின் வரலாறு
» சரப்ஜித்சிங் மரணத்தால் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
» மலேசிய சாலை விபத்தில் 5 தமிழர்கள் பலி
» நமது பாராளுமன்றம் எவ்வாறு இயங்குகிறது?
» மலேசிய மண்ணின் வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum