தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்வம் தரும் சிறந்த ஹோமம்

Go down

செல்வம் தரும் சிறந்த ஹோமம் Empty செல்வம் தரும் சிறந்த ஹோமம்

Post  birundha Mon Apr 08, 2013 11:13 pm


ஹோமங்கள் பல்வேறு நன்மைகளை வேண்டி நடத்தப்படுகிறது. ஆதிகாலத்தில் வெட்ட வெளிகளில்தான் ஹோமங்கள், யாகங்கள் நடத்தப்பட்டன. தற்போது எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப ஹோமம் செய்யப்படுகிறது. ஆயுள் பெற, பித்ருக்கள் ஆசி பெற என்று பலவகை ஹோமங்கள் உள்ளது. அந்த வகையில் செல்வம் பெறவும் ஹோமம் இருக்கிறது.

அந்த வகை ஹோமத்துக்கு தானகர்ஷன ஹோமம் என்று பெயர். செல்வம் சேர்க்கும் தர்ம வழியே தனாகர்ஷண ஹோமம் ஆகும். வடநாட்டில் தனலட்சுமி பூஜை தீபாவளி சமயத்தில் கொண்டாடப்படுகிறது. தாம் சேர்த்த பொருளையெல்லாம் வட நாட்டவர்கள் பூஜையில் வைத்து வழிபடுவர். ஸ்ரீரங்கத்தில் தீபாவளியன்று `ஜாலி அலங்காரம்' என கொண்டாடப்படுகிறது.

தை மாத வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தத்தில் இந்த ஹோமத்தைச் செய்யலாம். இதனால் தொழில், வியாபார, வேலை இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானமும் செல்வமும் பெருகும். தனம் சேர்வது தானம் செய்ய, தானம் செய்வது தர்மம் தலைகாக்க. மற்ற அருளைவிட லட்சுமியின் அருள் ஒன்றே தலைசிறந்தது. அதை பெற்றுத் தர வழி வகுக்கும் ஹோமம் இதுவாகும்.

விடியற்காலையில் குளித்து, சுத்தமான துணி உடுத்தி, திலகமிட்டுக் கொண்டு ஹோமத்திற்குத் தயாராக வேண்டும். சங்கல்பம் செய்து கொள்ளவும், பிறகு நம் செல்வத்தை யெல்லாம் ஒர குடத்திலிட்டு அதில் சுவர்ண லட்சுமியை ஆவாஹனம் செய்யவும். வட்டமான ஹோம குண்டத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்கவும், தேவதா ஆஜ்யபாகம், சமீதா தானம் செய்யவும்.

பிறகு சுத்தமான பசுநெய், தாமரைப்பூ, தங்கக்காசு, சர்க்கரைப் பொங்கல் மூலம் 108 ஆவர்த்தி `ஹிரண்யவர்ணா...' என்ற வேத மந்திரம் மூலம் ஹோமம் செய்யவும். அடுத்து பிராயச்சித்த ஹோமம் செய்யவும். சொக்கத் தங்ம், பட்டு முதலியற்றுடன் மட்டைத் தேங்காய் வைத்து பூர்ணாஹுதி செய்து ஹோமம் முடிக்கவும்.

கற்கண்டு பாலுடன் செய்த பொங்கல் நைவேத்யம் செய்து மங்கள ஆரத்தி எடுத்து நிறைவு செய்யவும். மலையாள தேசத்தில் தங்கத்தை உருக்கி நெய்போல் விட்டு இந்த ஹோமம் செய்தார்களாம். சுவர்ணலட்சுமி குடத்தை எடுத்துக் கொண்டு பிரசாதம் எடுத்துக் கொள்ளவும்.

இதனால் வீட்டில் லட்சுமி குடி புகுந்து செல்வச் செழிப்பு தருவாள் என்கிறது வேதம். இந்த ஹோமத்தினால் நிச்சயமாக இரண்டு உலகச் செல்வங்களான பொருளையும், அருளையும் பெறலாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum