தாலி தரும் பிரார்த்தனை
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
தாலி தரும் பிரார்த்தனை
பெரியபாளையத்தம்மன் ஏழைகளின் வீட்டு தெய்வமாவாள். குறிப்பாக மீனவ சமுதாய மக்களின் குல தெய்வமாக திகழ்ந்து, அம்மக்கள் அனைவரையும் பாதுகாத்து வருகிறாள். பொதுவாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடும் அலை, சூறைக்காற்று போன்றவைகளை எதிர்கொண்டு சமாளித்து மீன்பிடித்து வரவேண்டும். மீன்வளம் உள்ள ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்கள் சில நாட்கள் கழித்தே கரை திரும்புவார்கள்.
இப்படி கடலுக்குள் தொழில் செய்யும் தங்கள் கணவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்று மீனவப் பெண்கள் பவானி அம்மனை நினைத்து மனதார வேண்டிக் கொள்வார்கள். அதற்கு நன்றி காணிக்கையாக தங்களது தாலிக்கொடியையே அப்படியே பெரியபாளையத்தம்மன் கோவில் உண்டியலில் போட்டு விடுவார்கள்.
ஆடி மாத விழா காலத்தில்தான் மீனவப் பெண்கள், இந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குறிப்பாக 3-வது வாரம், 5-வது வாரம், 7-வது வாரம் அல்லது 9-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை மீனவப் பெண்கள் இந்த பிரார்த்தனையை செய்வதுண்டு. இதன் காரணமாக ஆடி மாதம் முழுவதும் உண்டியலில் தாலி காணிக்கை மிகுதியாக இருக்கும்.
வேப்பஞ்சேலை பிரார்த்தனை போலவே இந்த பிரார்த்தனையும் இந்த ஆலயத்துக்குரிய ஒன்றாக தனித்துவத்துடன் உள்ளது. சென்னையில் காசிமேடு பகுதி மீனவர்கள் ஏராளமானோர் பெரியபாளையத்துக்கு வந்து இந்த பிரார்த்தனையை செய்கிறார்கள். வட தமிழ்நாட்டின் கடலோர பகுதி மீனவர்கள் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் பெரியபாளையத்தம்மனை குல தெய்வமாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பிரார்த்தனை தரும் வெற்றி
» பிரார்த்தனை தரும் வெற்றி
» தாலி தாலி தாலி
» தாலி தாலி தாலி
» தாலி பாக்கியத்திற்கு.....
» பிரார்த்தனை தரும் வெற்றி
» தாலி தாலி தாலி
» தாலி தாலி தாலி
» தாலி பாக்கியத்திற்கு.....
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum