தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாரா விலகல்! மீண்டும் ஜெயம் ரவியுடன் த்ரிஷா…!

Go down

நயன்தாரா விலகல்! மீண்டும் ஜெயம் ரவியுடன் த்ரிஷா…! Empty நயன்தாரா விலகல்! மீண்டும் ஜெயம் ரவியுடன் த்ரிஷா…!

Post  ishwarya Wed Apr 03, 2013 6:04 pm

பூலோகம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருந்த
நிலையில் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் அந்த இடத்தை த்ரிஷா பிடித்து
இருக்கிறார். ஆதிபகவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிக்கவுள்ள படம்
பூலோகம். புதுமுகம் கல்யாண் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். அதிரடி
ஆக்ஷ்ன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர்
ரவிச்சந்திரன் பிரம்மாண்ட பொருட்ச்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில்
ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதலில் நயன்தாராவிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து
வந்தது. அவருக்கும் இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருந்ததால்
இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது
பூலோகத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. மாறாக
அவருக்கு பதில் த்ரிஷா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வருகிற
மே 20ம் தேதி முதல் பூலோகம் படத்தின் சூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.
பூலோகம் படத்திற்காக பிரபல ஸ்டுடியோ ஒன்றில் சுமார் ரூ.1.5கோடி செலவில்
பிரம்மாண்டமாக மார்க்கெட் ஒன்று உருவாகி வருகிறது.
ஏற்கனவே ஜெயம் ரவி-த்ரிஷா ஆகிய இருவரும் உனக்கும் எனக்கும்(சம்திங்
சம்திங்) படத்தில் ஜோடி போட்டு நடித்தனர். அந்தப்படம் சூப்பர் ஹிட்டானது.
இப்போது மீண்டும் இவர்கள் இணைந்து இருக்கிறார்கள். உனக்கும் எனக்கும்
வெற்றி இந்த பூலோகத்திலும் தொடருமா…? பொறுத்திருந்து பார்ப்போம்!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum