தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜூன் இறுதியில் கமலின் விஸ்வரூபம் ரிலீஸ்!

Go down

 ஜூன் இறுதியில் கமலின் விஸ்வரூபம் ரிலீஸ்! Empty ஜூன் இறுதியில் கமலின் விஸ்வரூபம் ரிலீஸ்!

Post  ishwarya Wed Apr 03, 2013 2:38 pm

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் ஜூன் மாத இறுதியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கமல்ஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நேஷனலும், பிவிபி சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். கமலை இயக்கியுள்ள இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். கமலுக்கு ஜோடியாக பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நடிக்கின்றனர். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள், அதாவது, ஸ்பெஷல் எபெக்ட்ஸ், இசை கோர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தற்போது அமெரிக்காவில் முகாமிட்டு இருக்கிறார் கமல்ஹாசன். இந்தபணிகள் எல்லாம் முடிந்தவுடன் விரைவில் படத்திற்கான புரோமஷன் வேலைகளை ஆரம்பிக்கிறார் கமல். ஜூன் முதல் வாரத்தில் படத்தின் ஆடியோ ரிலீசையும், அதனைத்தொடர்ந்து மாத இறுதியில் படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் கமல்.

இப்படத்தின் 30 விநாடி டிரைலரும், ஒரே ஒரு ஸ்டில்லும் சமீபத்தில் மே 1ம் தேதி ரிலீஸானது. படத்தின் ஸ்டில்லை பார்க்கும் போது, கமல் இப்படத்தில் பயங்கரவாதியாக நடித்திருப்பது போன்று தோன்றுகிறது. இதனால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum