தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித்குமார் படத்தில் ஆர்யா

Go down

அஜித்குமார் படத்தில் ஆர்யா Empty அஜித்குமார் படத்தில் ஆர்யா

Post  ishwarya Wed Apr 03, 2013 2:01 pm

சக்ரி டோலட்டியின் இயக்கத்தில் அஜித் குமார் தற்போது நடித்து வரும் பில்லா- 2 படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்நிலையில் அஜித் புதிய படமொன்றில் நடிக்க விருக்கிறார். இப்படத்தை பில்லா படத்தின் முதல் பாகத்தை எடுத்த விஷ்ணுவர்தன் இயக்குகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பில்லா படத்திற்கு பிறகு மூவரும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள். இந்தப் படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தில் அஜித்குமாருடன் மற்றொரு நாயகன் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் மற்றொரு நாயகனாக நடிப்பதற்கு ஆர்யா தேர்வாகியுள்ளார்.

மேலும் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். அவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் இருக்கும் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. அனேகமாக டாப்ஸி தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், துணை நடிகர்களின் தேர்வும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகளை இம்மாத இறுதியில் தொடங்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இப்படத்தை சூர்யா மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum