தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜூலையில் விஜய்யின் யோஹன் அத்தியாயம் ஆரம்பம்!

Go down

ஜூலையில் விஜய்யின் யோஹன் அத்தியாயம் ஆரம்பம்! Empty ஜூலையில் விஜய்யின் யோஹன் அத்தியாயம் ஆரம்பம்!

Post  ishwarya Wed Apr 03, 2013 1:55 pm

விஜய்யின் யோஹன் அத்தியாயம் ஒன்று, ஜூலை மாதம் முதல் ஆரம்பமாக இருக்கிறது. நண்பன் படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் புதியபடம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யின் நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் முக்கால்வாசி முடிந்துவிட்டது. இதற்கு அடுத்து விஜய் கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு யோஹன் அத்தியாயம் ஒன்று என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கிட்டத்தட்ட பல மாதங்கள் ஆகிவிட்டது. படத்தின் போஸ்டர் வெளியான போதே இப்படத்திற்கு அனைவராலும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காரணம் கையில் துப்பாக்கியுடன் வித்தியாசமான தோற்றத்தில் விஜய்யின் கெட்டப் அமைந்து இருந்தது. மேலும் விஜய், கவுதம் மேனன் உடன் இணையும் முதல்படம் என்பதாலும், படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதாலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

படத்தின் சூட்டிங் 2012-ல் ஆரம்பிக்கும் என்று போஸ்டர் வெளியான போதே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது எப்போது என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில், ஜூலை மாதம் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கவுதம் மேனன் தனது வலைதளத்தில், யோஹன் ஜூலையில் ஆரம்பமாகிறது என்று கூறியுள்ளார்.

தற்போது கவுதம், ஜீவாவை வைத்து இயக்கி வரும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறார். இந்த வேலைகள் ஜூன் மாதத்திற்குள் முடிந்துவிடும். இதனால் யோஹன் படத்தை ஜூலையில் ஆரம்பிக்க இருக்கிறார் கவுதம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum