ஃபெப்சி தேர்தல்: தலைவர் பதவிக்கு விசு-அமீர் போட்டி
Page 1 of 1

சென்னை: சினிமா தொழிலாளர்கள் சம்மேளன (ஃபெப்சி) தேர்தல், சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விசுவும் அமீரும் போட்டியிடுகின்றனர்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (ஃபெப்சியில்), 23 சங்கங்களை சேர்ந்த 25 ஆயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சம்மேளனத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
2012-2014-ம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. சென்னை வடபழனியில் உள்ள சம்மேளன கட்டிடத்தில், காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விசு, அமீர் ஆகிய இருவரும் போட்டியிடுகிறார்கள். பொதுச்செயலாளர் பதவிக்கு ஜி.சிவா, உமாசங்கர் பாபு ஆகிய இருவரும் போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு அங்கமுத்து சண்முகம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மற்ற நிர்வாகிகளின் தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவுக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விசு அறிக்கை
‘பெப்சி’ தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது ஏன்? என்பது பற்றி விசு விடுத்துள்ள அறிக்கையில், “1955-ம் ஆண்டிலேயே ‘படிதாண்டா பத்தினி,’ `லவகுசா’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவன், நான். அதை நான் நேசிக்கிறேன். சுவாசிக்கிறேன். 1987 காலகட்டங்களில் இருந்து நிறைய ïனியனில் செயலாற்றிய அனுபவம் எனக்கு உண்டு.
எந்த சங்கத்திலும் என் மீது இதுவரை புகார் கிடையாது. நானும் யார் மீதும் புகார் கொடுத்தது இல்லை. என்னை தாயாக இருந்து காப்பாற்றிய ‘பெப்சி’ சிலரால் தளர்ச்சி அடைந்து விட்டது.
அதை தாங்கிப் பிடித்து, தூக்கி நிறுத்தி, எதிர்கால சந்ததிகளுக்கு ஆரோக்கியமான ‘பெப்சி’யை உருவாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனால்தான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்,” என்று கூறியுள்ளார்.
அமீர் அறிக்கை
அமீர் விடுத்துள்ள அறிக்கையில், “பெப்சி தேர்தலில் நானாக போட்டியிடவில்லை. 23 சங்கங்களின் நிர்வாகிகள்தான் என்னை போட்டியிட செய்திருக்கிறார்கள். 15 சங்கங்களின் சம்பளம் பேசி முடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 8 சங்கங்களின் ஊதியம் இன்னும் பேசி முடிக்கப்படவில்லை. உடனடியாக அதை பேசி முடிக்க வேண்டும்.
தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்பட அரசிடம் இருந்து சில சலுகைகளை பெற்றுத்தருவதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன்.
‘பெப்சி’ தேவையில்லை என்று சொன்னபோது யாரும் தட்டிக்கேட்கவில்லை. தேர்தல் என்று சொன்னதும், சங்க தலைவர்கள் ஓடி வருவது ஆச்சரியமாக இருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தலைவர் பதவிக்கு போட்டி படீர் திடீர்… பவர் ஸ்டார்
» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்
» பெப்சி தேர்தல் - அமீர் வெற்றி
» தைரியமும் வீர்யமும் கொண்ட தலைவர் சீமான்! – இயக்குநர் அமீர்
» தலைவர் தேர்தல்: கோஷ்டி பூசலால் ‘குத்து’ ரம்யா திடீர் விலகல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum