சினிமாவை தவிர வேற உலகமே தெரியாது: நடிகை காவேரி
Page 1 of 1

வைகாசி பொறந்தாச்சு, திரைப்படத்தில் சின்னப்பெண்ணாய் அறிமுகமான காவேரி இன்றைக்கு தங்கம் சீரியலில் காமெடித்தனம் கலந்த வில்லி ரோலில் இளவஞ்சியாக கலக்கி வருகிறார். “தங்கம்’ தொடரின் படப்பிடிப்பு. நாச்சியார், மங்கா அக்கா என அனைவரிடமும் சிரித்து விளையாடிக்கொண்டே பிஸியாக இருந்த அவரிடம் சீரியல் பயணம் பற்றி பேசினோம்.
“வைகாசி பொறந்தாச்சு’ முதல் படம்ங்கிறதுனால அப்போ எனக்கு எதுவுமே தெரியாது அதனால் பயம் இருந்தது. இப்பொழுது பழகிடுச்சு. இருபது வருடமா இது மட்டும் தான் தெரியும். சினிமாவை தவிர வேற உலகமே எனக்குத் தெரியாது.
சினிமா, சீரியல்ன்னு நான் பிரித்து பார்த்ததில்லை. என்னை பொருத்தவரை கேமிரா லைட்டிங் மட்டும் தான் வித்தியாசமாக இருக்குமே தவிர மற்ற எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும். எனக்கு எங்கு போனாலும் சந்தோஷமா இருக்கணும். எல்லோரையும் சிரிக்க வைக்கணும்.
என்னுடைய ஃபேமிலி என்று சொன்னால் அது இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ளவர்கள்தான். நான் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட இங்கேதான் அதிக நேரம் செல விடுகிறேன். என்னுடைய சொந்தம், பந்தம் ,அத்தை, மாமா என்று எல்லாமே இங்கே உள்ளவர்கள் தான். எனக்கு வேற உலகமே இல்ல. வேற உலகத்தை பற்றி நான் நினைப்பது கூட இல்லை.
தங்கம் தொடரின் கதையை முதன் முதலில் கேட்கும் பொழுது இந்தளவுக்கு ரீச் ஆகும்ன்னு எதிர்பார்க்கவில்லை. ஐயாவுக்கு மருமகளாக வருகிற கேரக்டர் கொஞ்சம் பவர் ஃபுல்லான ரோல் என்று சொன்னார்கள். நான் இதுவரை நெகட்டீவ் ரோலில் நடித்தது கிடையாது. எனக்கே இது ஒரு புதுமையான அனுபவம் தான்.
ஐயாவின் சொத்து வேறு யாருக்கும் போகக் கூடாது என்பதற்குத்தான் அவ்வளவு வில்லத்தனம் செய்ய வேண்டி இருந்தது.முதலில் அதிக வில்லத்தனம் இருந்தது. இப்பொழுது கிளி, ஆடு, குழந்தை என காமெடி டிராக்கில் போகிறது.
தங்கம் தொடரில் என்னுடைய நடிப்பிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அம்மாதான் தினமும் தவறாமல் டிவியில் தொடரை பார்ப்பார்கள். நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் கூட அதைச் சுட்டிக்காட்டித் திருத்துவார்கள். சினிமாவில் நெகட்டிவ் ரோல் வந்தாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறிவிட்டு சூட்டிங்கிற்கு தயாரானர் காவேரி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினி பாப்கார்ன் - பூனத்தின் நுரை மறை காய்
» நடந்தாய் ; வாழி, காவேரி!
» படம் தயாரித்ததால் பொருளாதார சிக்கலில் காவேரி
» 4 பசுமாடுகளை மேய்ப்பேனே தவிர அடுத்தவன் உழைப்பை உறிஞ்சமாட்டேன் : பாண்டிராஜ்!
» எப்படி கடலை மாவை வெச்சு சூப்பரா ஃபேஸ் மாஸ்க் போடலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum