பாரதிராஜா படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்: சுதா சந்திரன்
Page 1 of 1

சினிமாவில் சாதனை படைத்த மயூரி சுதா சந்திரன் இப்போது சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். “கலச’த்தில் சந்திரவாக கலக்கி, “அரசி’யில் வக்கீலாக வந்து தற்போது தென்றலில் புவனாவாக வில்லத்தனம் செய்யும் மயூரி சுதா சந்திரன், தற்போது சென்னைக்கும் மும்பைக்கும் பறந்து கொண்டிருக்கிறார். தனது நீண்டகால மீடியா வாழ்க்கைப் பயணம் பற்றி அவரே கூறுகிறார் படியுங்களேன்.
பனிரெண்டு வருடத்திற்குப் பிறகு தமிழ்ல நடிக்க வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு. அப்போ நான் நடிக்கும் போது எனக்கு சரியான பாத்திரங்கள் அமையல. படங்கள் சரியா ஓடல. அதுல கொஞ்சம் ஏமாற்றமா இருந்தது. இந்த சமயத்துல இந்தியில வாய்ப்புகள் நிறைய வந்தது. அதனால மும்பையில போய் செட்டில் ஆகிட்டேன். அங்கே போய் டி.வி. சீரியல், இந்தி படங்கள் நிறைய நடிச்சேன். அதன் பிறகு அங்கே பாலாஜி டெலி பிலிம்ஸ்ல ரொம்ப பிஸியாக இருந்தேன்.
பாலாஜி டெலி பிலிம்ஸ்ல நடிச்சதை பார்துட்டு குட்டி பத்மினி மேடம் போன் பண்ணி கலசத்துல நடிக்க கூப்பிட்டாங்க. அதே போல பிரபுநேபால் சாரும் ஜெயா டிவியில ஒரு தொடர்ல நடிக்கக் கூப்பிட்டார். அவுங்க இரண்டு பேரும்தான் தமிழ் இண்டஸ்ட்ரிக்கு மறுபடி வர காரணம். “கலசம்’, “அரசி’ இரண்டும் நெகட்டீவ் ரோல். ரொம்பவே மேக்கப் போட்டுக்கிட்டு நடிச்சேன். ராதிகா மேடமோட நடிச்சது ரொம்ப நல்ல அனுபவம். எனக்கு பாரதிராஜா சார் படத்துல நடிக்கனும் ரொம்ப நாளா ஆசையிருந்தது. அப்போ அந்த வாய்ப்பு கிடைக்கல. ஆனா அவரோட உதவியாளரின் தாயம் தொடரில் அந்த ஆசை நிறைவேறின திருப்தி. இப்போ தென்றல்ல நல்ல வேடமா கிடைச்சிருக்கு.
ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்ததுனால தமிழ் அவ்வளவா என்னால பேசமுடியல. இப்போ லாங்வேஜ் நல்லா செட் ஆகிடுச்சு. நல்லா சரளமா தமிழ் பேசுறேன். அதுமட்டுமல்ல மும்பையில் இந்தி தொடர்களில் நிறைய நடித்தில் நல்ல எக்ஸ்பிரியன்ஸ் கிடைச்சருக்கு. எனக்கு நிறைய நம்பிக்கை வந்திருக்கு. அங்கேயும் சரி, இங்கேயும் சரி டைரக்டர்கள் நல்ல சப்போர்ட் பண்ணாங்க. எல்லாரும் நல்ல எக்ஸ்பிரியன்ஸ் டைரக்டர்கள் அதுனால நிறைய அனுபவம் கிடைச்சது. மும்பையில் உள்ள ஆடியன்ஸ்க்கும், தமிழ் ஆடியன்ஸ்க்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. அங்கே பார்த்தீங்கன்னா கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட்டு நடிக்கனும். ஆனால் மலையாளம், தமிழ்ல எல்லாம் ஓவர் மேக்கப் எல்லாம் தமிழ் கதைகள் எல்லாம் ஒவ்வொரு குடும்பத்துலையும் நடக்கிற உண்மையான கதை போல இருக்கும். ரொம்ப ஏதார்த்தமா இருக்கும். இந்தியில அப்படி கிடையாது. இப்போதான் இந்தி டெலிவிஷன் மாறிக்கிட்டு வருது. மெட்ரோவைவிட்டு நகர்ந்து கிராமங்களுக்குப் போக ஆரம்பிதிருக்கிறார்கள். இருந்தாலும் இந்தியில் ஜூவல்லரி, ஆடம்பர சாரின்னு
எல்லாமே கொஞ்சம் அதிகமா இருக்கும். ஆனால் தமிழில் அப்படியில்லை. தமிழ் ஆடியன்ஸை சீட் பண்ண முடியாது.
நான் நடிச்சதிலையே “மயூரி’ படம்தான் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அந்த மாதிரி படம் யாரும் நடிக்க மாட்டாங்க. அப்படியே பண்ணாக்கூட கதை யாரைப் பற்றியோ அவுங்களே அதில் நடிக்கிறது ரொம்ப கஷ்டம். அந்த மாதிரி அமையாது. நான் ரொம்ப லக்கி என்னோட வாழ்க்கையே படமாக்கி அதுல நானே நடிச்சிருக்கேன். அதுக்காக எனக்கு 1985ல தேசிய விருது கிடைச்சது. இதைவிட பெருமை வேற எதுவுமே இல்ல என் வாழ்க்கைல.
சமீபத்திலதான் சென்னையில் வீடு வாங்கினேன். இப்போ சூட்டிங்கிற்காக மாதத்தில் பதினைந்து, இருபது நாள் இங்கேதான் இருக்கிறேன். மும்பையில டான்ஸ் ஸ்கூல் வெச்சிருக்கேன். டான்ஸ் ஸ்கூல்ல போய் உட்கார்ந்துட்டா மனசுக்கு ரொம்ப நிம்மதி கிடைக்கும்.ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கு. முன்பு மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். இப்போ சென்னையில் இருந்து மும்பைக்குப் போய் வருகிறேன். எனக்குக் குழந்தைகள் இல்லை. என் கணவர் ரவியும் நானும் தான். அவர் சினிமா இன்டஸ்ட்ரியில் டைரக்ஷன் பீல்டுலதான் இருந்தாரு. அதுக்குப் பிறகு கனடா போய் சில வரும் ஓர்க் பண்ணிகிட்டு இருந்தாரு. இப்போது எங்கள் நாட்டியப்பள்ளியை அவர்தான் பார்த்து கிட்டு இருக்கிறார். ப்ளைட்டுக்கு நேரமாச்சு என்று கூறிவிட்டு கிளம்பினார் சுதா சந்திரன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாரதிராஜா படத்தில் தனுஷ்?
» பாரதிராஜா படத்தில் மீனாள்
» பாரதிராஜா படத்தில் அமீர் இல்லை
» பாரதிராஜா படத்தில் நடிக்காதது ஏன்? – பார்த்தீபன்
» பாரதிராஜா படத்தில் இருந்து இனியாவும் நீக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum