தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் ரூ.10லட்சம் நிதியுதவி!!

Go down

பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் ரூ.10லட்சம் நிதியுதவி!! Empty பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் ரூ.10லட்சம் நிதியுதவி!!

Post  ishwarya Tue Apr 02, 2013 5:52 pm

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக ரூ.10லட்சம் நிதியுதவி வழங்கி உதவியுள்ளார். விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதில் ஒருபகுதியாக ஒவ்வொரு வருடமும் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்குகிறார். அதன்படி இந்தாண்டுக்கான விழா சென்னை வடபழனியில் நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு வெள்ளிப் பதக்கம், கேடயம், சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். மேலும் 200 ஏழை மாணவ-மாணவிகளுக்கு ரூ.6 லட்சம் கல்வி உதவி தொகையும், உயர் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் உதவி தொகையும் என மொத்தம் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். பின்னர் மாணவர்களுக்கு தன் கைப்பட உணவு பரிமாறி அவர்களுடன் சேர்ந்து உணவும் சாப்பிட்டார்.

பின்னர் விஜய் பேசுகையில், மாணவ-மாணவிகளை ஊக்குவிக்க ஒவ்‌வொரு ஆண்டு இந்த பணியை செய்து வருகிறேன். தொடர்ந்தும் செய்வேன். எல்லோருக்கும் கல்வி ரொம்ப முக்கியமானது. அதை நன்றாக பிடித்து மாணவர்கள் ஓர் உயரிய இடத்திற்கு வர‌ வேண்டும் என்று கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum