தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடை பயிற்சியால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

Go down

நடை பயிற்சியால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் Empty நடை பயிற்சியால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

Post  meenu Tue Apr 02, 2013 5:20 pm


முதல் ஐந்து நிமிடங்கள்: திசுக்கள், உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும் ரசாயன மாற்றங்களை உருவாக்குகிறது. இதய துடிப்பு நிமிடத்திற்கு 70 முதல் 100 வரை உயர்கிறது. தசை இறுக்கம் குறைந்து நெகிழ்கிறது. மூட்டுகளின் இயக்கத்திற்கு தேவையான லூப்ரிகேஷன் திரவம் நன்றாக சுரக்கிறது. நடக்கும்போது உடலுக்கு அதிக சக்தி தேவைப்படும். அப்போது சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் கார்போஹைட்ரேட்டில் இருந்து தேவையான சக்தியை உடல் எடுத்துக்கொள்கிறது.

6 முதல் 10 நிமிடம்: இதய துடிப்பு 100-ல் இருந்து 140-க்கு உயர்கிறது. ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். தசைகளுக்கு அதிக ஆக்சிஜனும், ரத்தமும் செல்லும். உடலில் இருந்து நிமிடத்திற்கு ஆறு கலோரி செலவாகும்.

11 முதல் 20 நிமிடம்: உடல் சீதோஷ்ணநிலை உயரும். சருமத்தோடு சேர்ந்திருக்கும் ரத்த குழாய்கள் விரிந்து, உஷ்ணம் வெளியாவதால் உடல் வியர்க்கத் தொடங்கும். சுவாச சக்தி அதிகரிக்கும். சக்தி தரும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாகும்.

21 முதல் 45 நிமிடம்: உடலுக்கு சுக அனுபவத்தை தரும் ரசாயனம் உற்பத்தியாகும். உடலில் உள்ள கொழுப்பு எரிந்து, குறையும். அதற்குதக்கபடி இன்சுலின் குறையும்.

46 முதல் 60 நிமிடம்: நடையின் வேகத்தை மெதுவாக குறைக்கும்போது, இதய துடிப்பின் அளவு குறையும். சுவாசம் சீராகும். நடை பயிற்சி முடிந்து ஒரு மணி நேரம் வரை கலோரி செலவாகிக்கொண்டே இருக்கும். நடை பயிற்சி மூலம் இத்தனை நல்ல மாற்றங்கள் உடலுக்குள் நிகழ்வதால், அம்மாக்களே அவசியம் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum