இரத்த அழுத்தத்தால் ஏற்படும் மாற்றங்கள்
Page 1 of 1
இரத்த அழுத்தத்தால் ஏற்படும் மாற்றங்கள்
ஆண்டுதோறும் பெண்களின் மரணத்திற்கு சுமார் 51 விழுக்காடும், ஆண்களின் மரணத்திற்கு 37 விழுக்காடும் காரணமாக இருப்பது மிகை இரத்த அழுத்தம். இதிலிருந்தே இந்த நோயின் கொடுமை என்ன என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம். இதை ஹைஃபர் டென்ஷன், இரத்தக் கொதிப்பு என்றெல்லாம் கூறுகிறார்கள்.
இரத்தம் இதயத்திற்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும் இரத்த நாளங்கள் வழியாக வெளியேறும். இதற்கு இரத்த அழுத்தம் என்று பெயர்.
இரத்தம் வழியாக ஆக்சிஜனை செல்களுக்குக் கடத்துவதற்கு இரத்த அழுத்தம் முக்கியமானது. உடலின் உறுப்புகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்து வேலை செய்யும்போது இரத்த அழுத்தம் இயல்பாக இருக்கும். ஆனால், அவற்றுக்கு இடையே சமச்சீரின்மை தோன்றும் போது இரத்த அழுத்தம் வந்துவிடும்.
ஏற்படும் மாற்றங்கள்!
ஒருவருடைய எடை மற்றும் இரத்த அழுத்தத்தைப் பொறுத்து இதயத்தில் திசுச் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சின்னச்சின்ன இரத்த நாளங்களிலும் செல் எண்ணிக்கை அதிகமாகவதால் அவற்றின் பருமன் அதிகரிக்கிறது. இந்த மாற்றங்கள் தொடரும் போது செல்களில் சிதைவு மாற்றங்கள் உண்டாகிறது.
இதயத்தில் ஏற்படும் இந்த மாற்றங்களால் இதயத்தின் இடது கீழறையின் உள்ளிருந்து மூன்றில் ஒரு பாகம் இரத்த ஓட்டக் குறைவினால் பாதிக்கப்பட்டு இறுதியில் மாரடைப்பில் முடிவுறும். இதிலிருந்து பிழைக்க நேரிட்டாலும் ஹார்ட் ·பெயிலியர் எனப்படும் இதயச் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
திசு மாற்றங்களைப் பொறுத்து இதயத்திலும் இரத்த நாளங்களிலும் உண்டாகும் மாற்றங்களை அனுசரிப்பான மாற்றங்கள், சிதைவு மாற்றங்கள் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
நுண்மையான கொழுப்புப் பொருட்கள் இரத்த நாளச் சுவர்களில் படியும்போது நாளங்கள் சிதைய ஆரம்பித்து விடுகிறது. அதன்பின் இரத்த நாளத்தின் மிக மெல்லிய உட்சுவர் மற்றும் நடுச்சுவர் நாளங்கள் தடித்துப் பருமனாகிறது.
இத்தகைய மாற்றங்கள் பெரும்பாலும் சிறுநீரகங்கள் மற்றும் மூளைகளிலுள்ள இரத்த நாளங்களில் ஏற்படுகிறது. மூளையில் பாதிக்கப்பட்ட நாளங்களில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது இரத்தக் கசிவு ஏற்பட்டு நரம்பு மண்டலங்களைச் செயலிழக்க வைக்கும். இதனால் சுயநினைவில்லாமை, கை கால்கள் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.
பிரதான இரத்த அழுத்தம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு பாதிப்பும் அதிகமாகும்.
சில சமயம் ஓரளவு சீராக இருந்துவரும் இரத்த அழுத்தம் அடுத்த ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களில் அதிகமாகி மரணம் ஏற்படக் கூட வாய்ப்புள்ளது.
இந்தச் சிதைவு மாற்றங்கள் மிகச் சிறிய இரத்த நாளங்களில் ஏற்படும் போது இரத்தம் ஆங்காங்கே உறைந்து இரத்த ஓட்டம் தடைபடலாம். இதுபோன்ற மாற்றங்கள் கண்களிலும், சிறுநீரகங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. மூளையிலுள்ள இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு மூளைச் செல்களில் நீர்த் தேக்கம், இரத்தக் கசிவு, மயக்கம், சுயநினைவிழத்தல் மற்றும் மரணம் ஆகியவை நிகழலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இரத்த அழுத்தத்தால் ஏற்படும் மாற்றங்கள்
» நோய்க்கால உணவு முறை மாற்றங்கள்
» சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் * சைக்கிள் ஓட்டுவதால் இதயநோய் ஆபத்தை குறைக்கிறது * சைக்கிள் தினமும் சில மைல்கள் ஓட்டுவதால் உறுதியான தசைகளை பெறுகிறோம். * இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது. * இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. * நம் உட
» இரத்த சோகை இரத்த சோகை
» இரத்த வகைகள் இரத்த வகைகள்
» நோய்க்கால உணவு முறை மாற்றங்கள்
» சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் * சைக்கிள் ஓட்டுவதால் இதயநோய் ஆபத்தை குறைக்கிறது * சைக்கிள் தினமும் சில மைல்கள் ஓட்டுவதால் உறுதியான தசைகளை பெறுகிறோம். * இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது. * இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. * நம் உட
» இரத்த சோகை இரத்த சோகை
» இரத்த வகைகள் இரத்த வகைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum