மந்திரம்,உபதேசங்கள்
Page 1 of 1
மந்திரம்,உபதேசங்கள்
மந்திரம்:
ஒலிதான் முதலில் உண்டானது. அதன்பிறகே நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம். வெளியே உலகில் என்ன இருக்கிறோ அதுதான் உள்ளே மனிதனுக்குள்ளும் இருக்கிறது.
வெளியில் இருக்கிற மாதிரியே ஆகாசம் நம் இருதயத்திலும் இருக்கிறது. யோகிகள் ஹிருதயாகாசத்தை அனுபவிக்கிறார்கள். அவர்களால் ஒலிகளைக் கிரகிக்க முடிகிறது. அவற்றால் உலக நன்மையின் பொருட்டு உருவான சத்தக் கோவைகளே வேத மந்திரங்கள்.
மந்திரங்கள் ஆகாயத்தில் முன்பே இருந்தன. ரிஷிகள் அவற்றைக் கண்டு பிடித்தார்கள். மந்திரத்துக்கு கர்த்தா (செய்தவர்) யாரும் கிடையாது. மந்திரங்களின் அர்த்தத்தைவிட சத்தத்துக்கே முக்கியத்துவம் அதிகம். காரணம் சத்தம் சக்தி மிக்கது.
ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு சக்தி,உச்சரிப்பு இருக்க வேண்டும். மாறினால் தோஷம் உண்டாகும். நம் கண்ணுக்கும் காதுக்கும் எட்டாத விஷயங்களைச் சொல்வது வேதம்.
அவற்றை நாம் கண்ணாலும் காதாலும் பரீட்சிக்க முயன்றால் எப்படிச் சரியாகும் எதை சாட்சியங்களால் நிரூபிக்க முடியாதோ, எது புத்திக்கு அப்பாற்பட்டதோ அதைத்தான் முனிவர்கள் அறிந்து வேத மந்திரமாய் செய்து வைத்தார்கள்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» மந்திரம்,உபதேசங்கள்
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்
» ஞானத்தின் விளிம்பிலிருந்து... ஒஷோ உபதேசங்கள்
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» கிருஷ்ணர் உபதேசங்கள்
» பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்
» ஞானத்தின் விளிம்பிலிருந்து... ஒஷோ உபதேசங்கள்
» கிருஷ்ணர் உபதேசங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum