கோவிலுக்கு வெளியில் செருப்பை கழற்றுவது ஏன்?
Page 1 of 1
கோவிலுக்கு வெளியில் செருப்பை கழற்றுவது ஏன்?
செருப்பணிவது சுயகௌரவப் பிரச்சனையாக மக்கள் கருதுகிறார்கள். புண்ணிய கருமங்கள் அனைத்தும் செருப்பு இல்லாமல் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கோயிலில் நுழையும் போது செருப்பணியல் ஆகாது என்பது கட்டாயம் சில கோயில்களில் சட்டை அணிவதும் தடை செய்யப்பட்டுள்ளது. கோவில் சுவர்களுக்குப்பட்ட இடம் அனைத்தும் தெய்வ பூமி என்பது இந்து மதத்தின் நம்பிக்கை.
செருப்பை தவிர்த்து கோவிலுக்குள்ள நுழையும் போது பாதங்கள் இயல்பாக காந்த சக்தியுடைய தரையில் பதிகிறது. மனிதனின் உடல் நலத்திற்கு ஆரோக்கியமான பூமியின் காந்த சக்தி பாதம் தரையில் பதியும் போது உடலுக்குள் செலுத்தப்படுகிறது.
மேலும் கோவிலை சுற்றி மரங்களும்,மூலிகை செடிகளும் வைக்கப்பட்டிருக்கும்.இந்த மூலிகைகளுடைய மலர்களும், இலைகளும் கலந்த தண்ணீர் விழுந்த கோவில் மண்ணுக்கு மருத்துவ குணங்களும் அதிகமாக இருக்கும்.
இவை அனைத்தையும் மனதில் கொண்டு கர்வத்தையும் காலணியையும் தவிர்த்து இறை தரிசனம் செய்யும் போது காந்த சிகிட்சை நம்முள் நடக்கின்றது.
இஷ்ட தெய்வங்களை தியானித்து வெகு நேரம் கோவிலில் இருக்கும் போது மனதுக்கும் உடலுக்கும் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கோவிலுக்கு வெளியில் செருப்பை கழற்றுவது ஏன்?
» செருப்பை வாங்க போறீங்களா இதை தெரிஞ்சுகுங்க!!!
» இறைவனை வழிபட கோவிலுக்கு செல்ல வேண்டுமா?
» கோவிலுக்கு செய்ய வேண்டிய தானங்கள்
» கோவிலுக்கு செய்ய வேண்டிய தானங்கள்
» செருப்பை வாங்க போறீங்களா இதை தெரிஞ்சுகுங்க!!!
» இறைவனை வழிபட கோவிலுக்கு செல்ல வேண்டுமா?
» கோவிலுக்கு செய்ய வேண்டிய தானங்கள்
» கோவிலுக்கு செய்ய வேண்டிய தானங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum