தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நடைபயிற்சி

Go down

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நடைபயிற்சி Empty சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நடைபயிற்சி

Post  meenu Tue Apr 02, 2013 3:57 pm

இன்று நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதி மிகவும் பொதுவான ஒன்றாகிவிட்டது. தினமும் நடைபயிற்சியை பின்பற்றி வந்தால் சர்க்கரை நோய் உங்களை நெருங்காமல் செய்யலாம். அதிக எடை உள்ளவர்களுக்கும், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள் உறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும்.

அதோடு இன்சுலின் சுரப்பதில் தடையும், இதய நோய் சம்பந்தப்பட்ட பாதிப்பும் இருக்கலாம். இதைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி மிகச் சிறந்த வழி. முறையாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு 8 மாதத்துக்குப் பிறகு 8 சதவீத கொழுப்பு கரைவதையும், அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு 30 நிமிடம் என்று வாரத்துக்கு ஐந்து நாட்கள் நடப்பவர்கள் 5 முதல் 7 சதவீதம் வரை உடல் எடையைக் குறைக்க முடியும். 58 சதவீதம் அளவுக்கு சர்க்கரை நோய் அபாயத்தைத் தடுக்க முடியும். ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி இன்னும் அவசியம்.

'டைப் 2' சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்துக்கு நான்கு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களை விட இவர்களுக்கு இதயநோய் அபாயம் மிக மிகக் குறையும். உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல முடியாதவர்கள் தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சியை மேற்கொண்டால் மட்டும் போதுமானது.

உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி செய்ய வேண்டுமென்பதில்லை. வீட்டிலிருந்தே சில எளிய பயிற்சிகளை செய்து வரலாம். வாரத்தில் ஏழு நாட்களும் நடைபயிற்சி செய்ய வேண்டுமென்பதில்லை. வாரம் 5 நாட்கள் மட்டும் செய்தால் போதுமானது.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில். நோயின்றி ஆரோக்கியமாக வாழ தினமும் நடைபயிற்சியோ அல்லது எளிய உடற்பயிற்சிகளையோ தவறாமல் செய்து வர வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum