சர்க்கரை நோயை குறைக்க உதவும் உடற்பயிற்சி
Page 1 of 1
சர்க்கரை நோயை குறைக்க உதவும் உடற்பயிற்சி
சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய தலையாய நோய்க்கட்டுப்பாடு என்பது உடற்பயிற்சிதான். உடற்பயிற்சியால் இரத்தத்திலுள்ள சர்க்கரையை இன்சுலின் எரித்துவிடுகிறது. இதனால் சர்க்கரை வெளியேறுவதும் தடுக்கப்படும். துரித நடையும், மெல்லோட்டமும் இரத்த சர்க்கரையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை:
* சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி ஒரே நாளில் நிறைய உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. பயிற்சியின் கடுமையும், நேரத்தையும் மெதுவாக மெதுவாக அதிகரிக்க வேண்டும்.
* உடற்பயிற்சிக்கு முன் திரவ உணவு அருந்துவது நல்லது. வெறும் கால்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவது மிகவும் தவறானது.
* வாரத்திற்கு ஐந்து நாட்களாவது தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
* பத்து நிமிடம் வேகமாக நடப்பதற்கும், மெதுவாக ஓடுவதற்கு பத்து நிமிடமும், ஸ்கிப்பிங் ஆட பத்து நிமிடமும், நீச்சலுக்கு பத்து நிமிடமும், உட்கார்ந்து எழுதல் மற்றும் ஏரோபிக் பயிற்சிகளுக்கு இருபது நிமிடமும் ஒதுக்கினாலே போதுமானது. நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
* இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு குறை இரத்த சர்க்கரை என்ற பிரச்சனை இருந்தால் உடற்பயிற்சியை கடினமாக செய்யக் கூடாது.
* இரத்த ஓட்டம் சீராகும் வகையிலும், நரம்புத் தளர்ச்சிகள் சரியாகும் வகையிலும் மெதுவான உடற்பயிற்சிகளே போதும்.
* இரத்தக் குறைவு உள்ளவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றைப் போக்க மெதுவான உடற்பயிற்சியே ஏற்றது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சர்க்கரை நோயை குறைக்க உதவும் உடற்பயிற்சி
» சர்க்கரை நோயை குறைக்க உதவும் வெந்தயம்:
» சர்க்கரை நோயை குறைக்க
» எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி
» உடல் எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி
» சர்க்கரை நோயை குறைக்க உதவும் வெந்தயம்:
» சர்க்கரை நோயை குறைக்க
» எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி
» உடல் எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum