வரலட்சுமி நோன்பு
Page 1 of 1
வரலட்சுமி நோன்பு
வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி மேற்கொள்ளப்படும் நோன்பாகும். கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.
இந்த தினத்தில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்க வேண்டும். கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு ஆகியவற்றை இட்டு கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன லட்சுமியின் உருவச்சிலையை அல்லது படத்தை கலசத்திலுள்ள தேங்காயில் வைக்க வேண்டும்.
மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிந்து வரலட்சுமி கிழக்குப் பக்கமாக வைத்து வணங்க வேண்டும். தீப ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களைப் படைக்க வேண்டும். பின்னர் கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவர் கையில் கட்ட வேண்டும்.
பின்னர் படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம், மஞ்சள் புடவை போன்றவற்றை சுமங்கலிகளுக்கு தானமாகக் கொடுத்து ஆசி பெற்று காலை முதல் உண்ணாநோன்பிருந்ததை முடித்து தானும் உண்டு விரதத்தை நிறைவேற்ற வேண்டும். அன்று முழுவதும் அஷ்டலட்சுமி தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யவேண்டும். மாலை நேரத்தில் உற்றார், சுற்றார் வீடுகளுக்குச் சென்று ஒருவருக்கொருவர் தாம்பூலம் பெற்றுக்கொள்வது நல்லது.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum