மணிமூர்த்தீசுவரம் கோயில்
Page 1 of 1
மணிமூர்த்தீசுவரம் கோயில்
ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோவில் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு உச்சிஷ்ட கணபதியாக விநாயகர் அருள்பாலிக்கிறார். 2 ஏக்கர் பரப்பளவில் ஆலயம் அமைந்துள்ளது. பொதுவாக தனியாக எழுந்தருளி அருள்பாலிக்கும் விநாயகர் இங்கு அம்பாளுடன் எழுந்தருளுயுள்ளார்.
ஸ்ரீ நீலா வாணி என்பது இங்குள்ள அம்பாளின் பெயர். தம்பதி சமேதராக காட்சி தரும் இந்த விநாயகரை வழிபட்டு வந்தால் பக்தர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிறார்கள். குழந்தை பாக்கியம் தள்ளிக் கொண்டே போகிறது என்று ஏங்கும் தம்பதிகள், இங்கு வந்து வணங்கினால், வீட்டில் மழலை தவழும் யோகம் விரைவில் கூடி வரும் என்பதும் ஐதீகம்.
மேலும், செல்வம் பெருகுவதற்கு கொழுக்கட்டையும், குழந்தை வரத்திற்கு சர்க்கரை பொங்கலையும், நோய்கள் தீர வேண்டும் என்றால் கரும்புச்சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்வதை காண முடிகிறது.
போக்குவரத்து வசதி....
இந்த கோவிலுக்கு செல்ல சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் வசதியும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதியும் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
» ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்
» கோயில் கோயில்
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» பிரத்யங்கிராதேவி கோயில்
» ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்
» கோயில் கோயில்
» மணிமூர்த்தீசுவரம் கோயில்
» பிரத்யங்கிராதேவி கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum