ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்: மமதி
Page 1 of 1

எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் சிலர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்க்க அதிக ஆவலாய் இருக்கும். சிலரது குரலின் வசீகரம் அப்படி.
சன் தொலைக்காட்சியில் புதிய ரியாலிட்டி ஷோவான சூப்பர் குடும்பம் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ள மமதியின் குரலும் அப்படிப்பட்டதுதான். ஏற்கனவே விஜய் டிவியில் ஹலோ தமிழா, சன் டிவியில் ‘ராணி மகாராணி’ நிகழ்ச்சிகளின் மூலம் நேயர்களை கவர்ந்த அவர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார். சூட்டிங் பிஸியில் இருந்த அவரை செல்போனில் பிடித்தோம். தன்னுடைய சின்னத்திரை பயணம் குறித்த அனுபவங்களை அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
சின்னத்திரையில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்தில் இருந்து நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டு இருக்கிறேன். பிக் எஃப்.எம் வானொலியில் “பிக் வணக்கம்’ என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கியிருக்கிறேன். இதை தவிர விஜய் டிவியில் “சில்லுன்னு ஒரு சேலஞ்ச்’ என்ற நிகழ்ச்சியும், ஹலோ தமிழா நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கியுள்ளேன். சன் டிவியில் ராணி மகாராணி நிகழ்ச்சிக்கு நிறைய வரவேற்பு கிடைத்தது.
என் தமிழ் உச்சரிப்பைக் கேட்க பிடித்திருப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். நிகழ்ச்சி ரொம்ப இயல்பாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். அதுதான் வெற்றியின் ரகசியம் என்று நினைக்கிறேன். தமிழ் சின்னத்திரையைப் பொருத்தவரை என்னையும் என் தமிழையும் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அது எனக்கு கடவுள் கொடுத்த வரம். பின்னணி குரலுக்கான வாய்ப்புகளும் நிறைய வருகின்றன. ஆனால் குரலால் நடிக்க எனக்கு விருப்பமில்லை.
சின்னத்திரையைத் தவிர ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து கொண்டு இருக்கிறேன். அதற்கு முழு நேரமும் செலவிட வேண்டியிருப்பதால் அதிகப்படியான நிகழ்ச்சிகள் வழங்க நேரம் கிடைப்பது இல்லை. இப்பொழுது சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியை வழங்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சின்னத்திரை நட்சத்திரங்களின் தனித்திறமையை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சி. இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறது. முதல்வாரத்திலேயே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
எனக்கு சினிமாவில் எனக்கு நடிப்பதில் ஈடுபாடு இல்லை. நிகழ்ச்சி தொகுப்பாளராகவோ, அல்லது பங்கேற்பாளராகவோ இருக்கத்தான் விருப்பம். அதனால்தான் நடிப்பதற்கு வருகிற வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரோட படத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். சின்னவயதில் இருந்தே அவரோட ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சினிமாத்துறை மட்டுமல்ல எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி என்று எடுத்து கொண்டாலே அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி பேராடினால்தான் வெற்றி கிடைக்கும். அதே சமயத்தில் தன்னுடைய எல்லையைத் தாண்டாமல் உழைக்கும் வரை பிரச்னைகள் எது வந்தாலும் எதிர்கொள்ளலாம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் திறமையிருந்தால் வெற்றி பெறுவதற்கு ஆண், பெண் வேறுபாடு எல்லாம் கிடையாது என்று கூறிவிட்டு மாறாத புன்னகையோடு விடைபெற்றார் மமதி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் ஜோடி சேர நானும் தயார்! ஆன்ட்ரியா பேட்டி!!
» வாய்ப்பு கிடைத்தால் சினிமாவிலும் தமிழ் வளர்க்கலாம் – கமலுக்கு வைரமுத்து பதில்
» படம் கிடைத்தால் தானே நடிக்க முடியும் : ருக்மணி
» ரஜினியுடன் இணைந்து நடிக்க விருப்பம்:தேவயானி
» ரஜினியுடன் சேர்ந்து நடிக்க போறேன்- சரத் குமார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum