தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் ஜோடி சேர நானும் தயார்! ஆன்ட்ரியா பேட்டி!!

Go down

வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் ஜோடி சேர நானும் தயார்! ஆன்ட்ரியா பேட்டி!! Empty வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் ஜோடி சேர நானும் தயார்! ஆன்ட்ரியா பேட்டி!!

Post  ishwarya Wed Mar 27, 2013 2:55 pm

“கூகுள்… கூகுள்… பண்ணிப்பார்த்தேன் உலகத்தில…. இவ போல இங்கே இன்னொருத்தி கிடைக்கவில்ல… என்ற, இவர் பாடிய பாடலின் வரிகள், இவருக்கே பொருத்தமானவை. 2005ல் “கண்ணும், கண்ணும் நோக்கியா… பாடலில் அறிமுகமாகி, அனைத்து முன்னணி இசைப்பாளர்களுக்கும் குரல் கொடுத்த, “மாயக்குரல் மோகினி.

2006ல், “வேட்டையாடு விளையாடு படத்தில், கமலினி முகர்ஜிக்கு பின்னணி குரல் கொடுத்து, தனது மற்றொரு “இன்னிங்சை தொடங்கியவர். 2005ல் “கண்டநாள் முதல் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் அறிமுகமாகி, “பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல், ஒரு கண்ணாடி, என, இவரது நடிப்பு பயணம், நம்பிக்கையாய் நகர்ந்து கொண்டிருக்கிறது.

சென்னை அரக்கோணத்தில் பிறந்து, “விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த அழகு தேவதையின் பெயர், ஆண்ட்ரியா. ஆளை விழுங்கும் பார்வை, அழகிய கூந்தல், பூவுக்கு வெட்கம் தரும் புன்னகையுடன், மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், உங்களுக்காக எங்களுடன் பேசியவை இதோ:

* “மதுரை எப்படி இருக்கு?

விஸ்வரூபம் ஆடியோ ரிலீசிற்கு மதுரை வந்தேன்; படம் ரிலீஸ் ஆன பின், இப்போது வந்துள்ளேன். மதுரையின் உணவு “சூப்பர்.

* விஸ்வரூபம் அனுபவம் எப்படி இருந்தது?

கமல் சார் போன்ற “மெகா ஸ்டார் உடன் நடக்கும் அனுபவத்தை சொல்லவா வேண்டும்! தரமான தயாரிப்பில், நானும் இருந்திருக்கிறேன்.

* விஸ்வரூபம் 2ம் பாகத்தில் நீங்கள் இருக்கிறீர்களா?

அனைவரும் இருப்பார்கள்! நானும் இருப்பேன் என நம்புகிறேன்.

* படப்பிடிப்பு முடிந்து, விரைவில் “ரிலீஸ் ஆகும் என்கிறார்களே?

ஹி…ஹி…ஹி…(மவுனம் மட்டுமல்ல, சிரிப்பும் சம்மதம் தான் போல)

* “பாடல், நடிப்பு பொறுமையாக தேர்வு செய்கிறீர்களோ?

எனக்கான பாடல்கள் எதுவென, இசையமைப்பாளர்களுக்கு நன்கு தெரியும்; நடிப்பும் அப்படி தான். நம் மீதான நம்பிக்கை வரும் போது, நம் பங்களிப்பும் அதிகரிக்கிறது.

* கமலுடன் நடித்தாகிவிட்டது, அடுத்து….?

நீங்கள் யாரை கூறுகிறீர்கள் எனத்தெரிகிறது; வாய்ப்பு கிடைத்தால் “சூப்பர் ஸ்டார் உடன் நடிக்க நானும் தயார்.

* விஸ்வரூபத்திற்கு பின் ஆன்ட்ரியா “பிசியாமே?

சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்; விரைவில் அவை “ரிலீஸ் ஆகும். “இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும், என்ற ஆசை உள்ளது, எனக்கூறியவர், “”அடுத்த முறை வரும் போது, நிறைய பேசலாம்… என, விடைபெற்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்: மமதி
» வாய்ப்பு கிடைத்தால் சினிமாவிலும் தமிழ் வளர்க்கலாம் – கமலுக்கு வைரமுத்து பதில்
» விஜயுடன் ஜோடி சேரத் துடிக்கும் ஆன்ட்ரியா
» ரஜினியுடன் ஜோடி சேருவேன்: கத்ரீனா நம்பிக்கை!
» கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி: நடிகர் ஆதி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum