15 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்
Page 1 of 1
15 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்
15 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன் போன்ற பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை தாக்கி சிங்கள கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். கடந்த 13-ந்தேதி சிறைபிடிக்கப்பட்ட 53 மீனவர்களில் 34 பேரை மட்டும் இலங்கை கடற்படையினர் விடுவித்தனர்.
மீதம் உள்ள 19 பேர் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 19 மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமை ரெயில் மறியலிலும் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மீன்பிடிக்க தடைகாலம் நெருங்கி வருவதால் போராட்டத்தை கைவிட மீனவர்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று முதல் ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 400 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு இன்று மீன் பிடிக்க சென்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ராமேசுவரம் கோவில் உருவான வரலாறு
» 45 நாட்களுக்கு பலன் உண்டு
» 45 நாட்களுக்கு பலன் உண்டு
» ராமேசுவரம் கோவில் உருவான வரலாறு
» ராமேசுவரம் கோவில் உருவான வரலாறு
» 45 நாட்களுக்கு பலன் உண்டு
» 45 நாட்களுக்கு பலன் உண்டு
» ராமேசுவரம் கோவில் உருவான வரலாறு
» ராமேசுவரம் கோவில் உருவான வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum