நேரடி மானிய திட்டத்தால் ரூ.60,000 கோடி மிச்சமாகும்: மத்திய அரசு தகவல்
Page 1 of 1
நேரடி மானிய திட்டத்தால் ரூ.60,000 கோடி மிச்சமாகும்: மத்திய அரசு தகவல்
ஏழை-எளிய மக்கள் குறைந்த விலையில் உணவு பொருட்கள், உரம் போன்றவற்றை பெற மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை மக்களிடம் நேரடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஏழை, நடுத்தர மக்களுக்கு மானியத் தொகையை நேரடியாக வழங்குவதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று மத்திய அரசின் வேளாண் செலவு மற்றும் விலைக்கான கமிஷன் ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு மூலம் நேரடி மானிய உதவி பெறும் பயனாளிகளுக்கு வேறு எந்த கடுமையான விளைவுகளும் ஏற்படாது என்று தெரியவந்தது.
மேலும் மத்திய அரசு வழங்கும் மானியம் உரிய நபர்களின் கையில் சிந்தாமல், சிதறாமல் போய் சேர்ந்து விடுவதால் மத்திய அரசுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வரை மிச்சமாகும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மானிய தொகை வினியோகத்தில் நடந்து வரும் முறைகேடுகளை முற்றிலுமாக களைந்து விட முடியும் என்று தெரியவந்துள்ளது. நேரடி மானியம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கட்டுக்குள் இருக்கும். பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இத்தகைய சூழ்நிலை உருவாகும்போது நிதி பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும் என்று கருதப்படுகிறது. இதனால் நேரடி மானிய திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தும் ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» விஸ்வரூபம் மீதான தடை சரியல்ல – மத்திய அரசு மறைமுக கருத்து
» சோனியா காந்திக்கு எதிரான சுஷ்மாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை: மத்திய அரசு
» தமிழகத்தை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது- ஜெ. ஆவேசம்
» பொது சேமநல நிதி, அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum