மத்திய ஆட்சியை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள்: தா. பாண்டியன் பேச்சு
Page 1 of 1
மத்திய ஆட்சியை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள்: தா. பாண்டியன் பேச்சு
தஞ்சை ஆப்ரகாம்பண்டி தர் சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகில் எந்த மூலையில் கதறி அழும் குரல் கேட்டாலும் வலது கையில் செங்கொடியை ஏந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக முதல் குரல் எழுப்புவது கம்யூனிஸ்டுகள் தான். கம்யூனிஸ்டுகள் முழங்கி கொண்டிருக்கும்போது எங்கோ குண்டு போடுகிறார்கள். இவர்கள் இங்கே முழங்கி கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னவர்கள் ஏராளம்.
அண்டைநாடான இலங்கையில் குண்டு போட்டு அப்பாவி மக்கள் கதறி அழுதபோது நாம் பொங்கி எழுந்தோம். அது அண்டைநாடு. அந்த நாட்டு விவகாரத்தில் நாம் தலையிடமாட்டோம் என்று ஏளனம் பேசியவர்கள் நிறைய பேர் உள்ளனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். இலங்கையில் நமது சொந்த சகோதர, சகோதரிகளை கொன்று குவித்த ராஜபக்சே அழைத்ததன்பேரில் பாராளுமன்ற குழுவினர் அங்கே சென்றனர். அங்கு 3 ஆயிரம் ஏக்கரில் எத்தனை பேர் தொழிற்சாலைகள் தொடங்க இருக்கிறார்கள் என்ற பட்டியலை விரைவில் வெளியிடுவோம்.
தமிழக சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இலங்கையை நட்பு நாடு என்று சொல்லக்கூடாது. போர் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். போரில் பாழ்பட்ட இடமாக இருந்தாலும் தமிழர்கள் வசித்த இடத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும். தமிழர்கள் வசிப்பிடத்தில் குடியமர்த்தப் பட்ட சிங்களர்களை திரும்ப அனுப்ப வேண்டும் என்பது தான் அந்த தீர்மானம். இதை செய்ய மறுத்தால் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை எல்லா கட்சிகளும் சட்ட சபையில் ஆதரித்தனர். வெளியே வந்தவுடன் இவற்றில் உடன்பாடு இல்லை என்று சொல்கிறார்கள். இவர்கள் யாருக்கு நண்பர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இலங்கை எங்கள் நட்பு நாடு. ராஜபக்சே நல்லவர். அவர் மீது விசாரணை கூடாது என்று சட்ட சபையில் அந்த கட்சியினர் கூறியிருக்க வேண்டும். மத்தியஅரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கிறது. ஆனால் மத்தியஅரசை கவிழ்க்கமாட்டோம் என்று பேராசிரியர் அன்பழகன் சொல்லி இருக்கிறார்.
தமிழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கவும், அதற்கு காரணமானவர்களை கண்டித்தும் வருகிற 8ந் தேதி கும்பகோணத்தில் போராட்டம் நடக்கிறது. இதில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மத்தியில் பெரும் பான்மையை இழந்த ஆட்சி நடக்கிறது. மத்தியஅரசின் கொள்கைகளால் நாட்டின் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. மத்திய ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை மாவட்டம் சார்பில் ரூ.9 லட்சத்து 84 ஆயிரத்து 900 நிதி மாநில செயலாளர் தா.பாண்டியனிடம் வழங்கப் பட்டது. இதில் நிர்வாகிகள் முத்து.உத்திராபதி, சந்திரகுமார், பரமசிவம், அரங்க.சின்னப்பா, பாலசுந்தரம், பக்கிரிசாமி, பாரதி, தமயந்திதிருஞானம், விஜயலட்சுமி, தில்லைவனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உங்கள் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டுமா?
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம் என்று பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையினால் தான் பாக
» மத்தியில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. துணை
» கர்நாடகாவில் நான்தான் ஆட்சியை பிடிப்பேன்: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
» புதிய சட்டசபை வளாகத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்காலத் தடை
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம் என்று பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையினால் தான் பாக
» மத்தியில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. துணை
» கர்நாடகாவில் நான்தான் ஆட்சியை பிடிப்பேன்: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
» புதிய சட்டசபை வளாகத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்காலத் தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum