தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பலகோடி மதிப்பில் மேம்பாலங்கள்: மகாபலிபுரத்துக்கு பறக்கும் சாலை- ஜெயலலிதா அறிவிப்பு

Go down

பலகோடி மதிப்பில் மேம்பாலங்கள்: மகாபலிபுரத்துக்கு பறக்கும் சாலை- ஜெயலலிதா அறிவிப்பு Empty பலகோடி மதிப்பில் மேம்பாலங்கள்: மகாபலிபுரத்துக்கு பறக்கும் சாலை- ஜெயலலிதா அறிவிப்பு

Post  meenu Mon Apr 01, 2013 2:26 pm

முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும், மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிப்பதிலும் மிக முக்கியப் பங்கினை வகிப்பது சாலை கட்டமைப்பு என்பதைக் கருத்தில் கொண்டும்; ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கணிப்பதில் சாலைக் கட்டமைப்பு இன்றியமையாததாக விளங்குகிறது என்பதைக் கருத்தில் கொண்டும்; சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது.

அந்த வகையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும்; பயண நேரம் மற்றும் வாகன இயக்கச் செலவினை குறைக்கும் வண்ணமும்; புதிய பாலங்கள் அமைத்தல்; வட்டச்சாலைகள் அமைத்தல்; புறவழிச்சாலைகள் அமைத்தல் உட்பட பல்வேறு சாலைப் பணிகள் நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன்படி, சென்னை பெருநகர தகவல் தொழில்நுட்ப சாலையில் பெருகி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்; உயரமான அடுக்குமாடி குடியிருப்பு வசதிகள்; கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றால் உருவாகும் வாகன நெரிசலை குறைக்கும் வண்ணம் தரமணி முதல் சிறுசேரி வரை முதல் தொகுப்பாகவும்; சிறுசேரி முதல் மாமல்லபுரம் வரை இரண்டாவது தொகுப்பாகவும்; மொத்தம் 45 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட (பறக்கும்) சாலை அமைத்திட எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில், விரிவான திட்ட அறிக்கை விரைந்து தயாரிக்கப்படும். இதற்கென 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2005-ஆம் ஆண்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக் கொண்டபடி, திருநின்றவூர் முதல் பாடி வரையிலான 22 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், சுங்கம் வசூலிக்க சாத்தியக்கூறு இல்லாத காரணத்தால் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்படி சாலை எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே, அதிக அளவு வாகனப் போக்குவரத்தால் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள இந்தச் சாலை, மீண்டும் நகர்புற மாநிலச் சாலையாக எடுத்துக் கொள்ளப்பட்டு, 168 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, 98 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், சென்னை உலர் துறைமுகத்திற்காக, திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில், 126 கோடி ரூபாய்க்கு சிப்காட் மூலம் சென்னை துறைமுகக் கழகத்திற்கு நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. உலர் துறைமுகத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை-4 வரை டிரக்குகள் எளிதில் செல்லும் வகையில் இணைப்புச் சாலை அமைக்கும் பொருட்டு, மாவட்ட முக்கியச் சாலையான தண்டலம் - பேரம்பாக்கம் - தக்கோலம் அருகில் 39.40 கிலோ மீட்டர் நீள பாடி சாலை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி, மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகப்பட்டினம் - கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பெரம்பலூர் - மானாமதுரை மாநில நெடுஞ்சாலையில் மனக்கரம்பை வரை, இரண்டாம் கட்டமாக 14.27 கிலோ மீட்டர் நீளத்திற்கு 98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தஞ்சாவூர் புறவழிச்சாலை அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நபார்டு வங்கியின் கடன் உதவியுடன், அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 131 ஆற்றுப் பாலங்கள் மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 215 கிலோ மீட்டர் நீளமுடைய 67 அரசு சாலைகள் அமைக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல், 948 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் சின்னக்காவனம் மற்றும் நந்தியம்பாக்கம் ஆகிய இடங்களில் இரண்டு ரயில்வே மேம்பாலங்களும்; திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய இடங்களில் இரண்டு ரயில்வே மேம்பாலங்களும்; வேலூர் மாவட்டத்தில் வேலூர் மற்றும் வடுகன்தாங்கல் ஆகிய இடங்களில் இரண்டு ரயில்வே மேம்பாலங்களும்; திருச்சி மாவட்டத்தில் மணக்கால் மற்றும் கீழ கல்கண்டார் கோட்டை ஆகிய இடங்களில் இரண்டு ரயில்வே மேம்பாலங்களும்; சேலம் மாவட்டத்தில் முள்ளுவாடி கேட் மற்றும் வாழப்பாடி ஆகிய இடங்களில் இரண்டு ரயில்வே மேம்பாலங்களும்; திருவாரூர் மாவட்டத்தில் பேரளம், நீடாமங்கலம் மற்றும் சிங்கலாஞ்சேரி ஆகிய இடங்களில் மூன்று ரயில்வே மேம்பாலங்களும்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு ரயில்வே மேம்பாலமும்; நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு ரயில்வே மேம்பாலமும்; விழுப்புரம் மாவட்டம், மடப்பட்டில் ஒரு ரயில்வே மேம்பாலமும்; கோயம்புத்தூர் மாவட்டம் இராசிப்பாளையத்தில் ஒரு ரயில்வே மேம்பாலமும் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு ரயில்வே மேம்பாலமும்; ஆக மொத்தம் 11 மாவட்டங்களில் 18 இரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணிகளை செயல்படுத்தும் வகையில், நில எடுப்பு, பயன்பாட்டுச் சாதனங்களை மாற்றி அமைத்தல் மற¦றும் தல ஆய்வு போன்ற ஆரம்பகட்ட பணிகள் 201 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

சிறுசேரியில், சிப்காட்டிலிருந்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தினால் 2005-ஆம் ஆண்டில் 99 வருட குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள 4.9 ஏக்கர் நிலத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், 20 அடுக்கில் 2,000 வாகனங்கள் மற்றும் 50 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்த உதவும் பல்லடுக்கு வாகன நிறுத்தத்திற்கான கட்டடம் கட்டப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அமைந்திருக்கும் சிப்காட் தொழில் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை கொண்டு செல்வதற்கும்; உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை நாட்டின் இதர பகுதிகளுக்கு அனுப்புவதற்கும்; நல்ல சாலைக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தினை கருத்தில் கொண்டு; பர்கூரில் உள்ள சிப்காட் தொழில் வளாகத்தினை அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் போச்சம்பள்ளி- கொடமண்டப்பட்டி சாலையினை 8 கோடியே 68 லட்சம் ரூபாயில் அமைக்கவும்; போச்சம்பள்ளி-கொடமண்டப்பட்டி சாலையிலிருந்து சிப்காட் தொழில் வளாகத்தை இணைக்கும் வகையில் 3 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலையினை அமைக்கவும் எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெடுஞ்சாலைத் துறையில் என்னால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டங்களின் மூலம், தமிழகத்திலுள்ள சாலைப் போக்குவரத்து மேன்மை அடைவதுடன்; நகர்பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசல்கள் தவிர்க்கப்பட்டு, பயணிகள் எந்தவித சிரமமுமின்றி தாங்கள் விரும்பிய இடத்திற்கு குறைந்த நேரத்தில் சென்றடையவும், தொழில் வளர்ச்சி மேலும் மேன்மை அடையவும் வழிவகை ஏற்படும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பார்த்தீனியம் செடிகள் முழுமையாக அழிக்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
» கழிவு நீரால் ஏரி மாசுபட்டால் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு
»  மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டு கடன் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum