சரண்டருக்கு தயாராகிறார் வடிவேலு
Page 1 of 1
சரண்டருக்கு தயாராகிறார் வடிவேலு
நிமிடத்துக்கு இத்தனை ஆயிரம் என்று சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தவர் வடிவேலு. ஒரு படத்தின் ஹீரோவிற்கு இணையான சம்பளம் பெற்ற காமெடியன். விஜயகாந்த்துக்கும், இவருக்கும் பக்கத்து பக்கத்து வீடு. விஜயகாந்த் தொண்டர்களுக்கும் இவருக்கும் அவ்வப்போது ஏற்பட்ட சிறு சிறு ஊடல்கள் பெரும் பகையாக மாறி, காவல் நிலையம் நீதிமன்றம் வரை சென்றது.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து அப்போதைய தி.மு.க அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துக்கு எதிராக வாய்ஸ் கொடுக்க விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் இருந்த பகையை தி.மு.க சாணக்கியத்தனமாக பயன்படுத்திக் கொண்டது. ஒரு பெரும் தொகையை கொடுத்து விஜயகாந்துக்கு எதிராக வடிவேலுவை பிரச்சாரத்தில் இறக்கி விட்டது தி.மு.க. அடுத்தும் தி.மு.கதான் ஆட்சிக்கு வரும் என்று நம்பிய வடிவேலு தி.மு.கவின் இந்த வலையில் விழுந்தார். விஜயகாந்த்தை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் முடிவு மாறிப்போனதும் கலங்கிப்போனார் வடிவேலு. அதன் பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் நின்று போனது. அ.தி.மு.க.வோ, முதல்வர் ஜெயலலிதாவோ வடிவேலுக்கு யாரும் படம் தரக்கூடாது என்று சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வடிவேலு பற்றி நினைத்துப் பார்க்க கூட நேரம் இல்லை. ஆனாலும் வடிவேலுவை வைத்து படம் எடுத்தால் ஏதாவது பிரச்னை வருமோ என்று தாங்களாகவே பயந்து கொண்ட தயாரிப்பாளர்கள் அவரை அணுகவில்லை. அதோடு வடிவேலுவின் சம்பளம் இமயமலை அளவு உயர்ந்து இருப்பதால் சிறு தயாரிப்பாளர்கள் அவரை நெருங்க முடியாது. அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் மறுபடியும் ஒரு காதல். இந்த படத்துக்கு படத்துக்கு அரசோ, அ.தி.மு.க.வோ எந்த இடையூறும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா வாய்ப்பு இல்லாததால் மதுரையில் சொந்த வீடு கட்டும் பணியில் பிசியாக இருந்தார். இப்போது அதுவும் முடிந்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் பார்ட்& 2 எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் வடிவேலு. இதற்காக அவர் இயக்குனர் சிம்புதேவனோடு ஆலோசனை நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் எம்.எஸ்.விசுநாதன், ராமமூர்த்திக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இதற்கு வடிவேலுவுக்கும் அழைப்பு வந்தது. இதை வடிவேலு சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதாவை பார்த்து பயந்து கொண்டிருந்த வடிவேலுவுக்கு அவர் மீது பக்தி வர ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் விழாவுக்கு செல்லவில்லை. காரணம் ஜெயலலிதா பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாலும் கட்சிகாரர்கள் கலாட்டா செய்து விடுவார்களோ என்ற பயந்து கொண்டு செல்லவில்லை.
முதல்வர் ஜெயலலிதா நமக்கு எந்த இடையூறும் செய்ய மாட்டார் என்பதை வடிவேலு இப்போது தெளிவாக புரிந்து கொண்டார். இதனால் அம்மாவிடம் சரண்டர் ஆக தயாராகிக் கொண்டிருக்கிறார். இம்சை அரசன் படத்தின் அடுத்த பாகம் பலகோடி செலவில் தயாராக இருக்கிறது. தயாரிப்பாளர் யாரேனும் தயாரிக்க முன்வராவிட்டால் சொந்தமாக தயாரிக்கும் முடிவில் இருக்கிறார் வடிவேலு. இந்த நிலையில் அம்மாவின் ஆசி தனக்கு கண்டிப்பாக தேவை என்பதை உணர்ந்திருக்கிறார். அதனால் இப்போது வெளிப்படையாக அம்மாவை புகழ்ந்தும், மறைமுகமாக அய்யாவை திட்டியும் பேச ஆரம்பித்திருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'.
» ஆப்பிரிக்காவில் வடிவேலு- கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு?
» நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்கு தயாராகிறார் தமன்னா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum