தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரேணுகாம்பாள் கோயில் - படவேடு

Go down

ரேணுகாம்பாள் கோயில் - படவேடு Empty ரேணுகாம்பாள் கோயில் - படவேடு

Post  meenu Mon Apr 01, 2013 12:33 pm


மூலவர் - ரேணுகாம்பாள்
தல விருட்சம் - மாமரம்
தீர்த்தம் - கமண்டலநதி
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் - படவேடு
மாவட்டம் - திருவண்ணாமலை

ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாக பிறந்து ஜமதக்னி முனிவரை மணம் முடித்து பரசுராமரைப் பெற்றெடுக்கிறாள். கற்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவள். கணவரது பூஜைக்கு தனது சக்தியை பயன்படுத்தி, தினமும் ஆற்றுமணலில் செய்த புது பானையால் கமண்டலநதியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம்.

ஒருமுறை வான்வெளியில் சென்ற கந்தர்வனின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டதால், சக்தியிழந்து ஆற்று மணலில் குடம் செய்ய முடியாமல் போனது. தன் மனைவியின் கற்புத்திறன் மீது சந்தேகம் கொண்ட, ஜமதக்னி முனிவர், தன் மகன் பரசுராமரிடம், தாயைக் கொல்லும்படி ஆணையிட்டார்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப பரசுராமரும் தாய் ரேணுகா தேவியை வெட்டினார். இருந்தாலும், தந்தையிடம் மன்றாடி தன் தாயை உயிர் பிழைக்க வைத்தார். ஆனால், வெட்டப்பட்ட ரேணுகாதேவியின் தலை, வேறு பெண்ணின் உடலோடு சேர்ந்துவிட்டது. இதற்கிடையில் ஜமதக்னி முனிவர் இறந்துவிட, உயிர்வாழ விருப்பமில்லாத ரேணுகாதேவி கணவருடன் தீயில் விழுந்தாள்.

அப்போது மழை பெய்ததால் தீ அணைந்து, உடலில் கொப் புளங்கள் ஏற்பட்டன. உடை அணிய முடியாமல் போனதால், வேப்பிலையை ஆடையாக அணிந்தாள். அத்துடன் சிவனைக்குறித்து தவமிருந்து, தனது தலை மட்டும் இந்த பூமியில் இருக்கட்டும், பாழும் உடல் வேண்டாம் என்ற வரத்தைப் பெற்றாள்.

அதன்படி இத்தலத்தில் சுயம்புமூர்த்தியாக தலையை மட்டும் பிரதானமாகக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். பொதுவாக அம்மன் தலங்களில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக மண் பிரசாதமாகத் தரப்படுகிறது. இத்தலத்தில் தரப்படும் மண் விசேசமானது.

தானாகத் தோன்றியாதாகும். பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (அதாவது ரேணுகாதேவியின் கணவர்)வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில், அவர் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. வருடாவருடம்ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.

கருவறை......

அத்திமரத்தால் ஆன அம்மனின் முழு உருவமும், அதன் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மனும், அம்மனின் இடப்பக்கம் ரேணுகாதேவியின் சிரசும் உள்ளது. இத்திருக்கோயிலின் கருவறையில் அன்னை ரேணுகாதேவி(சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களாகவும் உள்ளனர். மேலும், ஆதிசங்கரர் பிரதிட்டை செய்த பாணலிங்கமும், சிலாசிரசும், சுதையிலான அம்மனின் முழுத்திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum