ஆதிகேசவப் பெருமாள் கோயில் - திருவட்டாறு
Page 1 of 1
ஆதிகேசவப் பெருமாள் கோயில் - திருவட்டாறு
ஸ்தல வரலாறு.....
மூலவர் - ஆதிகேசவப் பெருமாள்
தாயார் - மரகதவல்லி நாச்சியார்
தீர்த்தம் - கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம்
பழமை - 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர் - திருவட்டாறு
மாவட்டம் - கன்னியாகுமரி
பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.
திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளைப் பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள், திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி, இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர்.
இதனால் இத்தலம் “வட்டாறு” என அழைக்கப்பட்டது. கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப்பெருமாள் எனப்படுகிறார். பெருமாளின் 108 திருப்பதிகளில் இத்தல பெருமாள் தான் கிடந்த கோலத்தில், அளவில் மிகப்பெரியவர். இவர் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி அருளுகிறார்.
மேற்கு பார்த்த பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் முத்திரை காட்டி, தெற்கே தலைவைத்தும், வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அரிது. தாயார் மரகதவல்லி நாச்சியார். 108 திருப்பதிகளை தரிசனம் செய்பவர்கள் திருவனந்தபுரம் பத்மநாபரை தரிசிப்பதற்கு முன், ஆதிகேசவப்பெருமாளை தரிசிப்பது சிறப்பு.
இங்குள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார். பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது. இதனால் இவரை வணங்கினால், மறுபிறப்பு கிடையாது என்பது ஐதீகம்.
கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மதுகைடபர் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார்.ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆதிகேசவப் பெருமாள் கோயில் - திருவட்டாறு

» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
» உலகளந்த பெருமாள் கோயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum