தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா மீண்டும் நடிக்கிறார்

Go down

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா மீண்டும் நடிக்கிறார் Empty பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா மீண்டும் நடிக்கிறார்

Post  ishwarya Mon Apr 01, 2013 12:03 pm

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னணி ஹீரோக்கள் ஜோடியாகவும் நடித்துள்ளார். பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

1984-ல் அரசியலில் குதித்தார். காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றம் சென்றார். வைஜெயந்திமாலாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இந்தியில் தயாராகும் படமொன்றில் வைஜெயந்திமாலா மீண்டும் நடிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, மக்களுக்கு உதவும் முக்கிய விஷயம் படத்தில் இருந்ததால் நடிக்க சம்மதித்தேன் என்றார். ஆஸ்பத்திரியில் செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சையளிக்கும் நோயாளிகளுக்கு இந்த படம் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

இப்படத்தை சந்தீப் மாலினி இயக்குகிறார். அவர் கூறும்போது, வைஜெயந்தி மாலாவை அணுகி நடிக்க அழைத்ததும் கதையில் உள்ள சமூக நோக்கை உணர்ந்து உடனே சம்மதித்தார். அவர் நடித்த காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum