மலை முந்தல் விநாயகர் கோவில்
Page 1 of 1
மலை முந்தல் விநாயகர் கோவில்
ராஜபாளையம் சஞ்சீவி மலையின் அடிவாரத்தில் மலை முந்தல் விநாயகர் கோவில் உள்ளது. மலைமுந்தல் கோவில் அமைந்த வரலாறு அதிசயமானது. 200 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர் ஒருவர் பூமியை தோண்டிய போது சுவாமி தலை மட்டும் கிடைத்தது.
இதனால் ஆச்சரியம் அடைந்த அவர் மேலும் தோண்டிய போது அங்கு விநாயகர் சுயம்பு உருவமாக இருந்தார். பின்னர் அந்த இடத்தில் கிணறு இருந்ததால் சிலையை அங்கேயே வைத்து வழிபட்டனர். அன்று இரவு கனவில் தோன்றிய இறைவன் தற்போது இருக்கும் இடத்திலேயே தன்னை பிரதிஷ்டை செய்ய வேண்டுமென கூறி மறைந்தார்.
இதைதொடர்ந்து அங்கு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு விநாயகர் தன் உடம்பில் நாகம் சுற்றிய நிலையில் தவக்கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். இந்த கோவில் அருகே குகை ஒன்று காணப்படுகிறது. இ
ந்த குகையில் சுமார் 300 ஆண்டுகளாக பாலமா என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர் சில நேரங்களில் பாம்பு வடிவில் மலை முந்தல் கோவிலுக்கு வந்து விநாயகரை தரிசனம் செய்து விட்டு செல்வாராம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மலை முந்தல் விநாயகர் கோவில்
» மணக்குள விநாயகர் கோவில்
» ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
» கற்பக விநாயகர் கோவில்
» ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
» மணக்குள விநாயகர் கோவில்
» ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
» கற்பக விநாயகர் கோவில்
» ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum