தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாங்கல்ய பலன் தரும் மகா மாரியம்மன் கோவில்

Go down

மாங்கல்ய பலன் தரும் மகா மாரியம்மன் கோவில் Empty மாங்கல்ய பலன் தரும் மகா மாரியம்மன் கோவில்

Post  meenu Mon Apr 01, 2013 11:34 am

தன் கணவனுக்கு வந்த நோயை மருத்துவம் செய்தும் குணமாக்க முடியவில்லை அந்தப் பெண்ணால். 'நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இனி அவரை பிழைக்க வைக்க இயலாது.

அவரை அழைத்துச் சென்று விடுங்கள்' என்று டாக்டர்கள் கைவிரித்து விட, அந்த நோயாளியின் மனைவியான அபலைப் பெண் கலங்கி, கண்ணீர் விட்டுக் கதறிவிட்டு, கணவனுடன் ஊர் திரும்புகிறாள். 'மனிதர்கள் கைவிட்டால் என்ன? என் அன்னை என்கணவரைக் காப்பாற்றுவாள்' என்று தன் ஊரான வரதம்பட்டியில் உள்ள அருள்மிகு மகாமாரியம்மன் ஆலயத்திற்குச் செல்கிறாள். 'என் கணவனை மீட்டுக் கொடு, தாயே!

உன் மனம் குளிர ஊர் மக்களுக்கு கஞ்சி வார்த்து, என் திருமாங்கல்யத்தை உன்னிடமே காணிக்கை ஆக்குகிறேன்' என்று வேண்டிக் கொள்கிறாள். பின் அம்மன் காலடியில் அமர்ந்து கண்ணீர் மல்கபிரார்த்தனை செய்கிறாள். அன்னை தன்னுடைய கருணைக் கண்களைத் திறக்கிறாள். மானிடர்களால் கைவிடப்பட்ட அவள் கணவன் சிறிது சிறிதாக குணமாகி, விரைந்து பூரண நலம் பெறுகிறான்.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் அந்தப் பெண், அன்னைக்கு நன்றி கூறி பிரார்த்தனை செய்தபடி ஊர் மக்களுக்கு கஞ்சி வார்க்கிறாள். அத்துடன், தனது திருமாங்கல்யத்தை அன்னையிடம் சமர்ப்பிக்கிறாள். அவள் தேகம் சிலிர்க்கிறது. அவள் தேகம் மட்டுமா? பக்தர்கள் சொல்லும் இது போன்ற தொடர் அற்புதங்களைக் கேட்கும் நாமும் சிலிர்த்து தான் வியக்கிறோம்.

ஆம்! இந்த மகா சக்தி ஆலயமான அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயம் வரதம்பட்டு என்ற கிராமத்தில் உள்ளது. எட்டியவரை பசுமைக் கூட்டம். நெல் மற்றும் கரும்பு பயிர்களின் குவியல்கள். இடையே ஊர் மக்களின் குடியிருப்புகள். நடுநாயகமாக அன்னையின் ஆலயம். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

அழகாய், புதுப்பொலிவுடன் திகழும் இந்த ஆலயம் அழகாய் மெருகூட்டப்பட்டு கடந்த 29.10.2007-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. ஆலயத்தின் முகப்பைக் கடந்ததும் மகா மண்டபம் உள்ளது. இடது புறம் பேச்சாயி அம்மன் உக்கிர கோலத்திலும், அருகே வீரன் கையில் வாளுடனும் காட்சி தருகின்றனர். இரண்டுமே சுதை வடிவ திருமேனிகள். எதிரே கருவறையில் அன்னை மகா மாரியம்மன் கீழ் திசை நோக்கி அமைதியாய், புன்னகை தவழ காட்சி தருகிறாள்.

ஆடி வெள்ளிகள், தை வெள்ளிகள், பொங்கல், மாட்டுப்பொங்கல் போன்ற நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழி முப்பது நாட்களும் திருப்பள்ளி எழுச்சி சிறப்பாக நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் அன்று இந்த ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும்.ஆம். அன்று காவடித் திருவிழா நடைபெறும்.

நுற்றுக் கணக்கானவர்கள் காவடி, அலகு காவடி, பால்குடம், தீச்சட்டி சுமந்து ஆலயம் வந்து அனைத் தையும் அன்னையிடம் சமர்ப்பிக்கின்றனர். அன்று நடைபெறும் பாலாபிஷேகத்தைக் காண கண்கோடி வேண்டும். குடம் குடமாய் அன்னை பாலில் நீராடும் காட்சி பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கும்.அன்று கஞ்சி வார்த்ததுடன் ஏராளமான பேர் ர்களுக்கு அன்னதானமும் நடைபெறும்.

மாலை அன்னைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் பெறும். சுமார் 300 பேர் அன்று மாவிளக்கு பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். அன்னைக்கு எதிரே உள்ள நீண்ட வீதியில் வரிசையாக மாவிளக்கு இட்டு, தீபமேற்றி, அவர்கள் வழிபடும் போது, தெருவே தீப அலங்காரத்தில் திகழ்வது போல் பிரமிப்பாக இருக்கும்.

அம்மைநோய் கண்டவர்களுக்கு அம்மனின் அபிஷேக பாலை எடுத்துக் சென்று பருகச் செய்தால், நோயின் வெம்மை குறைந்து அவர்கள் விரைந்து குணமாகின்றனர் என பக்தர்கள் நம்புகின்றனர். ஆடி மற்றும் தை மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் அன்னை வீதியுலா வருவதுண்டு. மாட்டுப் பொங்கலை அடுத்து வரும் கரிநாள் அன்று ஆலயத்திற்கு முன் பொங்கல் வைத்துப் படைத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவு செய்வதும் பக்தர்களின் வழக்கமாக உள்ளது.

தினசரி இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில் உள்ள அன்னை பலநூறு குடும்பங்களின் குல தெய்வமாகவும் திகழ்கிறாள். தன்னை நம்பி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்ப்பதில் அன்னைக்கு நிகரில்லை என்பதே பக்தர்களின் உறுதியான நம்பிக்கை.

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் - பந்த நல்லூர் பேருந்து தடத்தில் உள்ள மணல் மேட்டிற்கு தென்கிழக்கே ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum