சொந்த வீடு அருளும் வாஸ்து தேவபதி
Page 1 of 1
சொந்த வீடு அருளும் வாஸ்து தேவபதி
சென்னைக்கும் புதுச்சேரிக்கும் நடுவில், கல்பாக்கத்திற்கு அருகே,
வேப்பஞ்சேரியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது, பரமேஸ்வரமங்கலம்.
பாலாறு சீராட்டும் இந்த ஊரின் சிறப்பை ஊரின் பெயரே சொல்லும். பாலாற்றின்
அழகிய நடையில் மனம் லயித்துப் போன பரமன், இத்தலத்தில் தவம் செய்தபிறகு
இந்த ஊர் பரமன் பெயராலேயே பரமேஸ்வரமங்கலமாகி இருக்கிறது. பரமன்
தவமியற்றியதால் மகுடமாய் சிறக்கும் இத்தலம், மாய வன் கோயில்
கொண்டிருப்பதால் மகுடத்தில் வைரமாய் ஒளிர்கிறது. எப்படி?
பரமேஸ்வரனின்
தவத்தைக் காணவந்த மாயவன் இங்கேயே கோயில் கொண்டானா? இல்லை. இந்த கோயிலுக்கு
என்னதான் வரலாறு என அறிய தேவப்ரசன்னம் பார்த்தபோது அது கூறிய ரகசியம்
சிலிர்க்க வைக்கிறது. இத்தல நாதனின் பெயர்-வாஸ்து தேவபதி என்கிற சௌமிய
தாமோதரப்பெரு மாள். தாயாரின் திருநாமம்-வாஸ்து லட்சுமி மற்றும் பூமிதேவி.
தீர்த்தம்-வாஸ்து தீர்த்தம் என்கிற க்ஷேத்ரபால தீர்த்தம். இந்த
நாராயணனையும் தாயா ரையும் ஆராதித்தவர்-வாஸ்து புருஷன் என்பதோடு இந்த
ஆலயத்தில் அருளும் நாராயணனை வணங்கினால் என்னென்ன பலன் என்பதையும் ப்ரசன்
னம் பட்டியலிட்டுள்ளது.
ஜாதகத்தில் வீடுகட்டும் பாக்யம் குறைவாக
இருப்பவர்கள் இவரை வணங்கினால் அந்த வரம் கிடைக்கும். பூமியால் உண்டாகும்
பிரச்னைகள் தீரும். வீடு கட்டும்போது உண்டாகும் தடைகள் நீங்குவதோடு, வீடு
கட்ட கடன் கிடைக்கும் என்றும் வீடு கட்ட வாங்கிய கடன் தீரும் என்றும்
சொல்லப்படுகி றது.
அதுமட்டுமல்ல, வீடு கட்டத் தொடங்குபவர்கள்
இத்தலத்திலிருந்து கொஞ்சம் மண் கொண்டு சென்று பூமி பூஜை செய்யும்போது,
பூமியில் இட்டு, அதன் பிறகு வீடு கட்டத் தொடங்கினால் தடைகள் இல்லாமல் பணி
நிறைவடையும் என்றும் சொல்லியுள்ளார்கள்.
இதை எல்லாம் மெய்ப்பிக்கும்
வகையில் இத்தலத்தைப் புதுப்பிக்க பாலாலயம் செய்யும் பணி தொடங்கி, பூமியை
தோண்டியபோது பூமிக்கடியில் இ ருந்து சௌமிய தாமோதரப் பெருமாளின் உற்சவர்
சிலையும் வாஸ்து லட்சுமி உற்சவர் சிலையும் கிடைக்கப் பெற்றுள்ளன. இன்னும்
ஏராளமான சிலைகள் கிடைக்கக் கூடும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இந்த
சிலைகள் கண்டெடுக்கப்பட்டது சனிக்கிழமை, பௌர்ணமி திதி, திருவோண நட்சத்
திரம் கூடிய நன்னாளில். இந்த அழகு தாமோதரர் கையில் பிரயோகச் சக்கரமேந்தி
இருப்பது கூடுதல் விசேஷம்.
சுமார் 300 ஆண்டுகாலமாக
பராமரிப்பில்லாமல் இருந்த இந்த கோயில் சீர் செய்யப்பட்டு வருகிறது. 2013
பிப்ரவரி 20 கும்பாபிஷேகம் செய்ய திட்டமி டப்பட்டு திருப்பணிகள் நடந்து
வருகின்றன. நம் வாழ்வை வளமாக்கி, நமக்கு வீடுகட்ட வரம் அருளும் சௌமிய
தாமோதரப் பெருமாளுக்கும் வாஸ்து
லட்சுமிக்கும் அழகிய ஆலயம் அமைக்கும்
பணியில் பங்கெடுக்க விரும்புவோர் 9840053289, 9843916069, 9789056615 ஆகிய
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சொந்த வீடு அருளும் வாஸ்து தேவபதி
» சொந்த வீடு அருளும் வழிபாடு
» சொந்த வீடு அருளும் வழிபாடு
» சொந்த வீடு யோகம் யாருக்குண்டு
» சொந்த வீடு யோகம் யாருக்குண்டு
» சொந்த வீடு அருளும் வழிபாடு
» சொந்த வீடு அருளும் வழிபாடு
» சொந்த வீடு யோகம் யாருக்குண்டு
» சொந்த வீடு யோகம் யாருக்குண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum