தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகா பைரவ ருத்ர ஆலயம்

Go down

மகா பைரவ ருத்ர ஆலயம் Empty மகா பைரவ ருத்ர ஆலயம்

Post  birundha Sat Mar 30, 2013 10:01 pm

சென்னை புறநகர் திருவடி சூலத்தில் அமைந்திருக்கும் மகா பைரவ ருத்ர ஆலயம் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஆத்மார்த்தமான திருப்தியை தர வல்லது. இந்த தலத்தின் நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்ததும் மனதில் அமைதி ஓடிவந்து ஓட்டிக் கொள்கிறது. பயம் என்ற சொல்லே பஞ்சாகப் பறந்து போய் விடுகிறது.

பயம் போக்கும் பைரவர், நம் ஒவ்வொருவரது மனதிலும் வந்து உட்கார்ந்து கொள்கிறார். 9 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அதிலும் பைரவர் வீற்றிருக்கும் கருவறை பகுதி பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது, ஆலயம் மற்றும் அரண்மனைக்குரிய கலவையான ஒரு கட்டிட அமைப்புடன் இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வேறு எங்கும் இத்தகைய புதிய பாணியிலான கோவில் அமைப்பை காண முடியாது. ஒரு மனிதன் தலைகீழாக நின்றால் எப்படி இருக்குமோ, அதே வடிவமைப்பில் பைரவர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கருவறை மிக அகலமாகவும், போக, போக மேலே ஒல்லியாகவும் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த கோபுர உச்சியில் ஒரே ஒரு கும்ப கவசம் இடம்பெற்றுள்ளது. காற்று வேகமாக அடிக்கும்போது, கும்ப கவசம் காற்று திசைக்கு ஏற்ப சாய்ந்தாடும். உலகில் வேறு எங்கும் இதுவரை இப்படி சாய்ந்து ஆடும் அமைப்பு கொண்ட கோபுரம் கட்டப்பட்டது இல்லை. மகா பைரவ ருத்ர ஆலயத்தின் மிக, மிக முக்கியமான வித்தியாசமான சிறப்புகளில் இது முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

பைரவர் கருவறையும் இதே மாதிரி எண்ணற்ற ஆச்சரியங்களையும், அற்புதங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. பைரவர் ஆலயம் வட்ட வடிவமைப்புடன் உள்ளது. மத்தியில் மேடை போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதில் பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த மேடையை ஏற 12 படிகள் கட்டப்பட்டுள்ளது.

மகாபைரவர் தன் உடல் முழுவதையும் 12 ராசி களாகக் கொண்டவர் என்பது ஐதீகம். அந்த ஐதீகத்தை பிரதி பலிக்கவே பைரவரை காண 12 படிக்கட்டுக்கள் ஏறவேண்டும் என்று நிர்மானித்துள்ளனர். சிவாலயங்களில் பொதுவாக ஈசான்ய மூலையில் காணப்படும் பைரவர், இந்த தலத்தில் மூலவராக மேற்கு திசை நோக்கி நின்று அருள்புரிகிறார். பைரவர் சிலையின் பின்பக்கத்தில் சிவன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான் கிழக்கு திசை நோக்கி நின்று அருள்செய்கிறார். பொதுவாக நிர்வாண கோலத்தில் இருக்கும் பைரவர் சிலையை பார்க்கவே பயமாக இருக்கும். கோரை பற்கள், கையில் கபாலம், இடையில் பாம்பு என்று கோபப் பார்வையுடன் இருக்கும் பைரவரை சாதாரண சமயத்தில் பார்த்தாலே சற்று பயம் வந்து ஒட்டிக் கொள்ளும்.

ஆனால் இந்த தலத்தில் அத்தகைய நிலை இல்லை. இங்கு பைரவர் மிக, மிக சாந்தமாக உள்ளார். அமைதியாக நின்று அருளும் அவரை பார்க்கும்போது, நமக்குள் மகிழ்ச்சியும், அமைதியும் குடி கொள்கிறது. பைரவரின் தலைமேல் நேர்கோட்டில் உச்சியில் கோபுர கலசம் அமைக்கப்பட்டுள்ளது. கும்ப கலசத்தில் இருந்து பைரவர் மீது சொட்டு, சொட்டாக தண்ணீர் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படி பைரவர் மீது விழும் தண்ணீர் தீர்த்தமாகிறது. இந்த தீர்த்தத்துக்கு சக்தி அதிகம் என்பது குறிப் பிடத்தக்கது. மகா பைரவ ருத்ரர ஆலயத்துக்கு நேரில் செல்லும்போது, இதை காண தவறாதீர்கள். உங்களுக்கு அந்த தீர்த்தம் கிடைத்தால், உண்மையிலேயே நீங்கள் பாக்கியவான்கள்தான். ஸ்ரீமகா பைரவமூர்த்தி நின்றருளும் கருவறை டூம் என்று சொல்வார்களே... அது போன்ற வட்ட வடிவில் கூண்டு போல் உள்ளது.

அந்த கூண்டு கூரையில் பளீரென மின்விளக்குகள் மின்னுவது இதுவரை எந்த ஆலய சன்னதியிலும் சந்திக்காத அனுபவமாக இருக்கும். இந்த கூண்டு வடிவம் மொத்தம் 35 அடி உயரம் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது. மூலவர் பைரவருக்கு கீழ் 35அடி ஆழத்தில் பாதாள பைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இந்த ஆகம தத்துவப்படி பார்த்தால், பைரவர் ஆலய கருவறையில் ஆசர்ஷணசக்தி நிலை கொண்டுள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆதிமூலம் உள்ளே உள்ளது. அதற்கு ஏற்ப மூலவர் ஸ்ரீமகா பைரவர் சிலையை சுற்றி 8 பைரவர்கள் அமையப் பெற்றுள்ளனர். இந்த கருவறைக்கு கதவோ, பூட்டோ எதுவும் கிடையாது. வாசல் திறந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆலயங்களில் இருந்து இது முற்றிலும் தனித்துவம் பெற்ற ஒன்றாகும்.

பொதுவாக சிவாலயங்களில் எல்லா சன்னதிகளையும் பூட்டி சாவியை பைரவர் காலடியில் வைத்து வணங்கி விட்டே இரவில் ஆலயத்தில் நடைசாத்துவார்கள். அதன்பிறகு கோவிலை பைரவர் பாதுகாப்பார் என்பது ஐதீகம். இத்தகைய காவல் தெய்வமான பைரவருக்கு கதவு என்பதே தேவை இல்லை என்பது ஸ்ரீபைரவம் சித்தாந்தம் சுவாமிகளின் கருத்தாகும்.

பைரவரை பூட்டி விட்டு சாவியை கொண்டு போய் யாரிடம் கொடுப்பது எனவேதான் பைரவர் ஆலயம் கதவு இல்லாமல் விடப்பட்டுள்ளது. தற்போது பால பைரவராக இருக்கும் மகா பைரவர் இன்னும் ஓராண்டில் கால ருத்ரமூர்த்தியாக அவதாரம் எடுப்பார். அதற்கு ஏற்ப பக்தர்களுக்கு இங்கு பலன்கள் கிடைக்கும்.

இந்த ஆலயத்தில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், இந்த ஆலய அமைப்பை நிர்ணயித்தது கட்டிட வல்லுனர்களோ, படித்த என்ஜினீயர்களோ அல்ல. ஸ்ரீபைரவம் சித்தாந்தம் சுவாமிகள் சொல்ல, சொல்ல கட்டுமானம் செய்யப்பட்டது. அதாவது பைரவரே முன்நின்று தனக்குத்தானே வடிவமைத்துக் கொண்ட ஆலயமாகும். பைரவர் சன்னதி அருகில் மிகப்பெரிய மணி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

ஆலயமணி அடித்தால் புண்ணியம் என்பதால் அதை அமைத்துள்ளனர். பைரவர் சன்னதி எதிரில் சன்னதி கட்டப்பட்டுள்ளது. இது தவிர ஆலயத்தின் ஒரு பகுதியில் தன்வந்திரி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. நோய் தீர இங்கு வழிபடலாம். மேலும் ருத்ர விநாயகர் பிருத்தியங்கரா தேவி, வள்ளி, தேவசேனா சமே சுப்பிரமணியர் ஆகிய சன்னதிகள் இந்த ஆலய வளாகத்துக்குள் உள்ளன.

இந்த ஆலயத்தை சுற்றி வரும்போது பைரவரின் வாகனமான நாய்கள் ஆங்காங்கே நடமாடுவதை காணலாம். 35 நாய்கள் அங்கு உலா வருகின்றன. நான்கு வேதங்களின் ஒட்டுமொத்த அம்சமாக நாய்கள் திகழ்கின்றன. அந்த வகையில் மகா பைரவ ருத்ர ஆலயத்தில் வலம் வரும் பைரவரின் வாகனங்கள் பக்தர்களை ஆசீர்வதிப்பதாகவே உள்ளன.

பஞ்ச பூதமும் ஆட்சி செய்யும் தலம்.......

திருவடி சூலம் ஸ்ரீமகா பைரவர் ருத்ர ஆலயம், பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் தலமாக உள்ளது. இங்கு பாதாளம் முதல் ஆகர்ஷணம் வரை ஒரே நிலை உள்ளது. இந்த தலத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் பலன் பெற வேண்டும் என்பதற்காக தலைவாசல் பிரம்ம வாசலாக உள்ளது. அதுபோல பக்க வாட்டில் குபேர வாசலும் உள்ளது.

சிவ ஆகம விதிகளின்படி இங்கு தீப வழிபாடு நடத்தப்படுகிறது.இத் தலத்தில் பரிவார தெய்வங்களாக ருத்ர விநாயகர், வைஷ்ணவிதேவி, பிருத்தியங்கரா தேவி, வள்ளி- தேவசேனை சமேத சுப்பிரமணியர் உள்ளனர். பிரகார காவல் தெய்வங்களாக நாகசக்தியும், வன துர்க்கையும் அமைந் துள்ளனர். சற்று தொலைவில் தன்வந்திரி பகவான் வீற்றுள்ளார். அவர் முன் தீர்த்த கிணறு உள்ளது.

இந்த தீர்த்தத்தில் நீராடினால் எவ்வளவு கொடூர நோயாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகமாகும். ஸ்ரீமகா பைரவர் ஆலயத்தின் ஒரு பகுதியில் கோமாதா குடிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத் தலத்தில் தினமும் காலை 6 மணி,மாலை 6 மணி, இரவு 8 மணி ஆகிய நேரங்களில் மூன்று கால பூஜை நடத்தப்படுகிறது.

தேய்பிறை அஷ்டமி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறும். கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்படும். பைரவர் என்றாலே பயம் அறியாதவர் என்று தானே பொருள். எனவே தான் பைரவர் ஆலயத்துக்கு இங்கு கதவு இல்லை. இத்தலத்தில் பைரவருடன் நீரில் சப்த கன்னிகளும் இருக்கிறார்கள். எனவே இத்தலத்தில் வழிபட்டால், சப்த கன்னியர் அனைவராலும் கிடைக்கும் புண்ணிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

தீட்டு என்றாலும் பயப்பட தேவை இல்லை...........

பெண்கள் தீட்டு நாட்களில் கோவில் பக்கமே செல்ல மாட்டார்கள். ஆனால் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் இந்த கட்டுப்பாட்டை மிகக் கடுமையாக எதிர்க்கிறார். தீட்டு பற்றி பெண்கள் கவலைப்படவோ, அச்சப்படவோ தேவை இல்லை. ஸ்ரீமகா பைரவ ருத்ர ஆலயத்துக்கு வந்து இயற்கையாக வழிபடலாம் என்று கூறியுள்ளார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum